October 5, 2024, 9:37 PM
29.4 C
Chennai

TNPSC: இந்து சமய அறநிலையத்துறையில் பணி!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள நிர்வாக அலுவலர் கிரேடு 4 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த தேர்வு மூலம் மொத்தம் 36 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு இந்து சமயத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

இந்த பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்வதற்கான செயல்முறை 20.05.2022 முதல் 18.06.2022 வரை இருக்கும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

நிர்வாக அலுவலர் கிரேடு 4 ( Executive Officer, Grade- IV)

காலியிடங்களின் எண்ணிக்கை: 36

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது தமிழ் புலவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 19,500 – 71,900

வயதுத் தகுதி: 01.07.2022 அன்று 25 வயது முதல் 37 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC(V), MBC DNC, MBC, BC and BCM பிரிவுகளுக்கு வயது வரம்பு கிடையாது.

தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு இரண்டு தாள்களாக நடைபெறும். முதல் தாள் இரண்டு பிரிவுகளாக நடைபெறும். முதல் பிரிவு தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இதில் 100 வினாக்கள் 150 மதிப்பெண்களுக்கு கேட்கப்ப்படும். இந்த தேர்வில் 60 மதிப்பெண்கள் எடுப்பது கட்டாயம். இல்லையென்றால் பிற தாள்கள் மதிப்பீடு செய்யப்பட மாட்டாது.

இரண்டாம் பிரிவில், பொது அறிவில் 100 வினாக்களும் கேட்கப்படும். இதில் பொது அறிவில் 75 வினாக்களும், கணிதப்பகுதியில் 25 வினாக்களும் இடம்பெறும். இதற்கான கால அளவு 3 மணி நேரம்.

இரண்டாம் தாளில் இந்துமதம், சைவம் மற்றும் வைணவம் பாடப்பிரிவுகளில் இருந்து வினாக்கள் இடம்பெறும். இதில் 200 வினாக்கள் 300 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். இதற்கான கால அளவு 3 மணி நேரம்.

இரண்டு தாள்களிலும் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும்.

எழுத்து தேர்வு நடைபெறும் நாள் : 11.09.2022

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 150, இருப்பினும் ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

தேர்வுக் கட்டணம் : ரூ. 100, இருப்பினும் SC, SC(A), ST, MBC(V), MBC – DNC, MBC, BC, BCM மற்றும் விதவைகள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு உண்டு.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விரும்புபவர்கள் http://www.tnpsc.gov.in அல்லது http://www.tnpscexams.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் அதன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.06.2022

இது குறித்து மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/Document/english/13_2022_EO_GR_IV_Notfn_Eng.pdf என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்

author avatar
Suprasanna Mahadevan

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பண்பொழி பெருமாள் கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு!

விழா ஏற்பாடுகளை விழாக் கமிட்டியினா் நாயுடு சமுதாய நிர்வாகிகள், பெரியோர்கள், இளைஞரணி நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனா்.

பஞ்சாங்கம் அக்.05 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் - அக்.05ஸ்ரீராமஜயம் - ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம்||श्री:||...

டிவி ஸ்க்ரீனை துடைக்கும் போது செய்யவே கூடாத 8 தவறுகள்! மீறினால் ‘டேமேஜ்’தான்!

நம்மில் பலரும், வீட்டில் உள்ள மற்ற பொருட்களை போலவே ஸ்மார்ட் டிவியையும் சுத்தம் செய்யும் பழக்கத்தினை கொண்டுள்ளோம். ஆனால் உங்களுக்கு தெரியுமா?

வடகிழக்குப் பருவமழைக் காலத்திற்கான நீண்ட கால வானிலை முன்னறிவிப்பு!

நவம்பர் 2024க்கான மழை மற்றும் வெப்பநிலைக்கான கண்ணோட்டத்தை அக்டோபர் 2024 இறுதியில் இந்திய வானிலை ஆராய்ச்சித் துறைவெளியிடும். வடகிழக்குப்

பஞ்சாங்கம் அக்.04 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

தாம்பரம்- கொச்சுவேலி ரயில் மீண்டும் இயக்கம்! முன்பதிவு தொடக்கம்!

இந்த ரயிலை நிரந்தரமாக சாதாரண முன்பதிவு பெட்டிகள் மற்றும் முன்பதிவு இல்லாத சாதாரண ரயில் பெட்டிகள் இணைத்து இயக்க தமிழக கேரள ரயில் பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்

ஸ்ரீவி., வடபத்ரசாயி பிரமோத்ஸவம் நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி கோயிலின் பிரமோத்ஸவம் நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

மாணவர்களுக்கான ‘திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி’; மதுரை ஆட்சியர் அழைப்பு!

1330 குறட்பாக்களையும் ஒப்பிக்கும் மாணவர்களுக்குப் பரிசுத்தொகையாக ரூ.15,000/- (ரூபாய் பதினைந்தாயிரம் மட்டும்) வழங்கப்பெறும்.

Related Articles

Popular Categories