எடப்பாடி கோயில் திருவிழாவில் தெப்பம் தண்ணீரில் மூழ்கியதால் பரபரப்பு..

எடப்பாடியில் ஸ்ரீ சௌந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி சுவாமிகளை தெப்பத்தில் எடுத்துச் செல்லும்போது எதிர்பாராத விதமாக தெப்பம் தண்ணீரில் மூழ்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

சேலம் மாவட்டம், எடப்பாடி, மேட்டு தெருவில் உள்ள ஸ்ரீ சௌந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி சுவாமிகளை மூன்றாவது வாரச் சனிக்கிழமை நாள்களில் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து பெரிய ஏரியை கடந்து சென்று சூரிய மலை அடிவாரத்தில் உள்ள வெள்ளூற்று பெருமாள் கோயிலில் வைத்து சுமார் 2000-த்திற்கும் மேற்பட்டோர் சுவாமி தரிசனம் செய்து வருவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு பெய்த தொடர் கன மழை காரணமாக ஏரி, நீர் நிலைகள் நிரம்பியதால் 22 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீ சௌந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி, சுவாமிகளை தெப்பத்தில் எடுத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தொடர்ந்து மேட்டு தெருவிலிருந்து சுவாமிகளை மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் சென்று பெரிய ஏரி முதல் கரையில் தெப்பத்தில் சுவாமியை வைக்கும் போது ஆட்கள் அதிக அளவில் தெப்பத்தில் இருந்ததாலும் பாதுகாப்பு அம்சங்கள் எதுவுமின்றி தெப்பம் உருவாக்கப்பட்டதாலும் எதிர்பாராத விதமாக தெப்பம் தண்ணீரில் மூழ்கியது. அப்போது தெப்பத்தில் இருந்த சிலர் தண்ணீரில் மூழ்கினர். உடனடியாக காவல்துறையினர் அங்கு இருந்தவர்களை மேலே வரவழைத்த பின்னர் தெப்பம் மீண்டும் தயார்படுத்தப்பட்டு குறைவான ஆட்களை மட்டும் அனுமதித்து சுவாமியை தெப்பத்தில் வைத்து வெள்ளூற்று பெருமாள் கோயிலுக்கு சுமார் 2 கிலோ மீட்டர் தெப்பத்தில் சுவாமியை எடுத்துச் சென்றனர்.

மேலும் தெப்பத் திருவிழாவில் 1000-த்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டுச் சென்றனர். மேலும் பாதுகாப்பு அம்சங்கள் எதுவுமின்றி பரிசல் மூலம் தெப்பம் தயாரிக்கப்பட்டதாலும் பாதுகாப்பு உடைகள் இன்றி தெப்பத்தில் காவல்துறையினர் அதிக அளவில் ஆள்களை அனுமதித்ததாலும் இந்த விபத்து நடைபெற்றதாக கூறப்படுகிறது.

fest - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories