பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு துவங்கியது- கள்க்குறிச்சியில் 2,831 மாணவர்கள் ஆப்சென்ட்..

images 2 1 - 2026

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பிளஸ்-2 பொதுத்தேர்வில் 2,831 மாணவர்கள் ஆப்சென்ட் ஆகியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 மாணவர்களுக்கான அரசு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. இந்த தேர்வு அடுத்த மாதம் 3-ந்தேதி வரை நடக்கிறது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி நடப்பு ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று (மார்ச் 13) தொடங்கி ஏப்.3-ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளான இன்று மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. தமிழகம், புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள 3,225 மையங்களில் 8.75 லட்சம் மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுதினர். 23,747 தனித்தேர்வர்கள், 5,206 மாற்றுத் திறனாளிகள், 6 மூன்றாம் பாலினத்தவர், 90 சிறைகைதிகளும் இதில் அடங்குவர்.

பொதுத்தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர் பணியில் 46,870 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முறைகேடுகளை தடுக்க 4,235 நிலையான குழுக்கள், பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர், முதன்மை கல்வி அலுவலர், வருவாய் துறை அதிகாரிகள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 281 வினாத்தாள் கட்டுப்பாட்டு மையங்களில் ஆயுதம் ஏந்திய போலீஸார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், கழிப்பறை உள்ளிட்ட அனைத்துவசதிகளும் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் திருச்சியில் உள்ள இ.ஆர்.மேல்நிலைப் பள்ளியில் தேர்வு நடைபெறவுள்ள வகுப்பறைகளையும், அடிப்படை வசதிகளையும் ஆய்வு செய்து மாணவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.

இந்த தேர்வை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10 ஆயிரத்து 350 மாணவர்கள், 10 ஆயிரத்து 218 மாணவிகள் என மொத்தம் 20 ஆயிரத்து 568 பேர் எழுத இருந்தனர். இதற்காக 74 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது. மேலும் தனித்தேர்வர்கள் தேர்வு எழுதவும் 4 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 2,831 மாணவர்கள் ஆப்சென்ட் ஆகியுள்ளனர். 1,156 மாணவர்களும், 1,675 மாணவிகளும் இந்த தேர்வில் பங்கேற்கவில்லை என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். நாளை தொடங்கவுள்ள பிளஸ்-1 தேர்வை 9 ஆயிரத்து 200 மாணவர்கள், 9 ஆயிரத்து 64 மாணவிகள் என மொத்தம் 18 ஆயிரத்து 264 பேர் எழுத உள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories