தருமபுரி அருகே மீண்டும் மின் வேலியில் சிக்கி யானை பலி..

962189 - 2026

 தருமபுரி மாவட்டத்தில் கடந்த வாரத்தில் பாலக்கோடு அடுத்த மாரண்ட அள்ளி பகுதியில் விளை நிலத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி மூன்று யானைகள் உயிரிழந்த நிலையில் தற்போது இன்று காரிமங்கலம் வட்டம் கெலவள்ளி அருகே உயர் அழுத்த மின் பாதையை தொட்ட ஆண் யானை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலக்கோடு வனச் சரகம் பிக்கிலி கிராம பகுதியில் கடந்த சில நாட்களாக ஆண் யானை ஒன்று விளை நிலங்களில் நடமாடி வந்தது. இந்த யானையை வனத்துக்குள் இடம் பெயரச் செய்யும் முயற்சியில் வனத்துறை பணியாளர்கள் ஈடுபட்டு வந்தனர். வெள்ளிக்கிழமை இரவு இந்த யானை பாப்பாரப்பட்டி, காரிமங்கலம் பகுதி வழியாக கம்பைநல்லூர் பகுதிக்கு சென்றுள்ளது.

வனத்துறையினரும் யானையை பின்தொடர்ந்து சென்றுள்ளனர். இந்நிலையில், இன்று மார்ச் 18 கம்பைநல்லூர் அடுத்த கெலவள்ளி அருகேயுள்ள வி.பள்ளிப்பட்டு பகுதியில் ஏரிக்கரையில் ஏற முயன்ற இந்த யானை அப்பகுதியில் சென்ற உயர் அழுத்த மின்பாதையில் மோதியுள்ளது.

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

இதில், யானையின் உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அந்த யானை உயிரிழந்தது.

கடந்த வாரத்தில் பாலக்கோடு அடுத்த மாரண்ட அள்ளி பகுதியில் விளை நிலத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி மூன்று யானைகள் உயிரிழந்தன. இந்த சம்பவம் நடந்த இரண்டு வார இடைவெளியில் மீண்டும் ஒரு யானை மின்சார விபத்தில் உயிரிழந்திருப்பது விலங்கு நல ஆர்வலர்கள் மற்றும் சூழல் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

Entertainment News

Popular Categories