பிளஸ்-2 தேர்வு முடிவு-10-ந்தேதி முதல் திருத்தும் பணி துவக்கம்..

images 2023 04 04T113410559 - 2026

பிளஸ்-2 தேர்வு நேற்று முடிவடைந்த நிலையில் அனைத்து பாடங்களின் விடைத்தாள்களும் பாதுகாப்பாக மையங்களில் வைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு மாவட்டத்திலும் விடைத்தாள்கள் கலெக்டர் கட்டுப்பாட்டில் போலீஸ் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன. சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு அந்த பகுதிக்கு வெளியாட்கள் செல்வதை தடுக்கும் வகையில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

விடைத்தாள்கள் 10-ந்தேதி முதல் திருத்தப்படுகின்றன. விடைத்தாள்கள் மாவட்டங்களுக்கு இடையே இடமாற்றம் செய்து திருத்தப்படுகின்றன. தமிழகம் முழுவதும் 80 மையங்களில் விடைத்தாள்கள் திருத்தப்படுகின்றன.

இந்த பணியில் 70 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுகிறார்கள். விடைத்தாள்களை கவனமுடன் திருத்தவும், தவறுகள் ஏற்படாத வகையில் முறையாக திருத்தம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூட்டல் தவறும், மதிப்பெண் போடாமல் விடுதல் உள்ளிட்ட பிழைகள் ஏற்படாதவாறு பணியினை மேற்கொள்ள வேண்டும் என கல்வி அதிகாரிகள் மூலம் ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடைத்தாள் திருத்தும் பணியில் அலட்சிய போக்கு வேண்டாம் எனவும் மையங்களில் செல்போன் பயன்படுத்துவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்று தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் விடைத்தாள் திருத்தம் செய்த ஆசிரியர்களில் சிலரின் கவனக்குறைவின் காரணமாக மாணவர்களுக்கு மதிப்பெண் குறைவதோடு, விபரீத முடிவுகளை எடுக்கும் சூழலும் உருவாகிறது. தவறு செய்யும் ஆசிரியர்கள் நடவடிக்கைக்கு ஆளாகிறார்கள்.

இந்த போக்கு தொடரக்கூடாது என்பதில் கல்வித்துறை உறுதியாக உள்ளது. விடைத்தாள் திருத்தும் பணி 24-ந்தேதி வரை நடைபெறுகிறது. அதன்பின்னர் மதிப்பெண் பதிவேற்ற பணிகள் நடைபெறும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

Topics

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

Entertainment News

Popular Categories