
தமிழகத்தை நேற்று அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய சம்பவமாக கல்லூரிப் பெண் அஸ்வினியின் படுகொலை அமைந்தது. இது முழுக்க முழுக்க சினிமா பாணியில், சினிமாக் கதைகளின் அடிப்படையி.ல் அமைந்த சம்பவமாகவே மாறியிருந்தது. இது சமூக மட்டத்தில் பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் தோற்று வித்துள்ளது.
முன்னர் சுவாதி என்ற பெண் படுகொலை செய்யப் பட்ட போதும், தொடர்ந்து காதல் எனும் போர்வையில் பெண்கள் படுகொலையாகும் போதும் ஒருதலைக் காதலும், தறுதலைத்தனமும் தான் வெளித் தெரிகிறது. ஒரு இளம் பெண்ணின் கனவுகளைச் சிதறடித்து, கொலை செய்யும் அளவுக்கு கொடூரனாக மாறும் அளவுக்கு ஒரு இளைஞனைத் தயார் செய்யும் அரசியல்வாதிகளின் மலினப் பேச்சு இப்போது விவாதப் பொருளாகியிருக்கிறது.
காரணம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இளைஞர்களிடம் ஆற்றும் வீராவேச உரைகள் அந்த இளைஞர்களின் மூளையை மழுங்கடித்து வெறி கொண்டு அலயத் தூண்டுகின்றன என்கிறார்கள் நிகழ்வுகளை உற்று நோக்குபவர்கள்.
இத்தகைய பின்னணியில், சமூகத் தளங்களில் மக்கள் இந்தச் சம்பவம் குறித்து என்ன நினைக்கிறார்கள்… உதாரணத்துக்கு மூன்று கருத்துகள். இவை பரவலாக சமூகத் தளங்களில் வலம் வந்தவை!

கருத்து – 1:
அஸ்வினியின் கொலையை ஒரு நண்பர் அந்த ஒல்லிப்பிச்சான் நடிகன் அப்படி ஒரு படத்திலே செய்ததை பார்த்து செய்திருக்கிறான் – என்று எழுதியிருந்தார்.
அந்த ஒல்லிப்பிச்சான் மட்டுமில்லை, எல்லா சினிமா நாயகன்களும் இப்படித்தான் வலியுறுத்தியிருக்கிறார்கள்.
குமரிக்கோட்டம் படத்தில் ஏதோ குப்பத்து மக்களுக்கு நல்லது செய்வதாக எண்ணி ஜெயலலிதாவை எம் ஜி ஆர் ஈவ் டீசிங் செய்யும் அசிங்கம் இன்றைக்கும் ஜெயா மாக்சில் ஒளி பரப்பாகிறது
தெய்வ மகன் படத்தில்ல் சிவாஜி – ஜெயலலிதாவை விரட்டி விரட்டி ஈவ் டீசிங் செய்வதும் அவ்வப்போது சன் மியூசிக்கில் வருகிறது.
பத்து வயது சிறுமியைப்போல் இருக்கும் பண்டரிபாயை பார்த்து கண்ணடித்துக்கொண்டே தியாகராஜ பாகவதர் பாடும் காட்சியினை ஒரு இண்டர்வியூ காட்சியில் பார்த்தேன்.
கடை வீதி கலகலக்கும் என்று ராதாவை ஈவ் டீசிங் செய்து விட்டு, ராதாவுக்கு கட்டாயத்தாலி கட்டும் விஜயகாந்த்தையும் பார்த்து விசிலடித்திருக்கிறோம்.
ரஜினியும், கமலும் – கதாநாயகிகளை விரட்டி விரட்டி ஈவ் டீசிங் செய்ததையும் யாரும் மறந்திருக்க மாட்டீர்கள். லிப்லாக்கை ஃபேமஸ் ஆக்கிய மய்யம் மறுக்க முடியாது.
சிவகுமார் குடும்பமும் – அவர் உட்பட படங்களில் செய்த ஈவ் டீசிங் யாரும் மறுக்க முடியாது.
எவன்டி உன்ன பெத்தான்.., ஊதா கலரு ரிப்பன்..,மட்டுமில்லை, தலயும், தருதலைகளும் விதி விலக்கல்ல.
இந்த நிலையிலும், சில கல்லூரி மாணவிகள் தல, தருதலை, சிம்பு, தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என்று ப்ரொஃபைல் ஃபோட்டோக்களாக வைத்திருப்பது தான் உச்சக்கட்ட வேதனை.
இத்தனை நாளாக நிர்பயா, ஸ்வாதியை மறந்திருந்தோம், அஸ்வினி நினைவு படுத்தி விட்டாள்.
நாளைக்கு ஏதாவது ஒரு சிலையில் காக்கா எச்சம் போடும். அது அய்யரு வீட்டிலேருந்து சாப்பிட்டு வந்து தலைவரு தலையிலே எச்சம் போட்டுவிட்டது என்று நாலு பேரோட பூணூலை அறுத்து, சாதனை புரிவோம்.
அதுவரைக்கும் அஸ்வினியை சகோதரி என்று கொண்டாடுவோம்.
#பெரியார்_மண்ணுடா

கருத்து-2:
அந்தப் பெண்ணின் தகப்பன் நிலையில் நின்று வயிறெரிந்து சொல்கிறேன்:
தான் காதலித்த பெண் கிடைக்காவிட்டால், அவள் யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று, சினிமாவில் கதை சொல்லும் பொறுக்கி..
பெண் என்றாலே பையன்கள் கூட்டமாகச் சேர்ந்து ‘ஃபிகரு’- ‘சைட்டு’- ‘கில்மா’..- என்று பகடி செய்து பாட்டு வைத்துப் படம் எடுக்கும் பொறுக்கி; அப்படிப்பட்ட பாட்டை எழுதிக் கொடுக்கும் பொறுக்கி…
ஸ்கூல் யூனிஃபார்ம் போட்டபடியே – அந்த வயதிலேயே காதல் வந்து- அந்தப் பெண் பள்ளிக்குக் கட் அடித்துவிட்டுக் காதல் உணர்வுக்கு ஆட்படுவதாகப் படமெடுக்கும் பொறுக்கி…
பத்து பைசா சம்பாதிக்க துப்பில்லாத பரட்டைத் தலைப் பொறுக்கிக் கதாதாயகன், தன் தகுதிக்கோ உருவத்துக்கோ தொடர்பில்லாமல், பேரழகியாக விளங்கும், படித்த பெண்ணுக்கு நூல் விடுவதுதான் மகத்தான காதல் என்று படமெடுக்கும் பொறுக்கி…
காதில் ஒற்றை வளையம், வசிப்பிடம் வட சென்னை, அழுக்கு ஜீன்ஸ், வாயில் புகை, பாட்டிலுடன் ஃப்ரெண்ட்ஸ், மச்சி மச்சி வசனம், பேச்சில் கெட்டவார்த்தை இதெல்லாம்தான் புரட்சிகரமான படத்தின் இலக்கணம்; அந்த ரோக் கதாநாயகனை மாபெரும் கருணை மிக்கவனாக- ரௌடிதான் அவன் மனசுலயும் கருணை- என்று ரவுடியை ஹீரோ ஆகவும், அவன் துரத்தித் துரத்திக் காதலிக்கும் பெண் கட்டாயம் தென் சென்னை மயிலாப்பூர் ‘சாஸ்த்ரோக்தமான’ பாவாடை சட்டை போட்ட பெண்தான்..- என்று கதைவிடும் பொறுக்கிகள்…
தன் காதலுக்கு மசியாத பெண்ணை அவள் வீடு வரை சென்று அவர்கள் பேசும் ‘பாஷை’ யையே நையாண்டி செய்து மிரட்டும் பொறுக்கி…
எல்லாவற்றுக்கும் மேல் இப்படிப் பட்ட காதல்தான் புரட்சிக் காதல், இதுதான் தமிழ் சினிமா இலக்கணத்தையே மாற்றிப் போட்ட படம் என்று தலை மேல் தூக்கி வைத்து ஆடும் அறிவுஜீவி ஜோல்னாபை பொறுக்கிகள்…
அத்தனை பொறுக்கிப் பயலையும் கூட்டி வச்சு ஒட்டுக்க ‘நறுக்கிடணும்’!

கருத்து – 3:
சென்னை மீனாட்சி கல்லூரி மாணவி அஸ்வினி காதலனால் பட்டபகலில் கொலை செய்யபட்டுள்ளார்…
இந்த கொலைகள் ஏன் நிகழக்கிறது …?
காரணங்களை, சூழ்நிலைகளை ஆராய்ந்தால்
1. சினிமா
சினிமாவின் மூலம் குழந்தைகளுக்கு சொட்டு மருத்து கொடுப்பதிலிருந்து தூய்மை இந்தியா வரைக்கும் சொல்ல வருவதை.. சொல்ல நினைப்பதை மக்களிடம் கொண்டு செல்ல அனாதை ரட்சகானாக இருப்பது சினிமா ஹீரோக்களே.
அந்த ஹீரோ உடுத்தும் உடை வடிவமைப்பு, இன்று கல்லூரி மாணவர் உடுத்தும் “லோஹிப்ஸ் என்ற பேண்ட் ” ஐ சொல்லலாம் !
இடுப்புக்கு கீழே பின் குண்டி தெரிய அணிந்து உலா வருவது… நாகரிக மனிதனின் மிக கேவலமான வடிவமைப்பாகும் இந்தஉடை… அந்த ஹீரோ முடி வடிவமைப்பு… இந்த நூற்றாண்டின் மிகவும் அருவேறுக்கத்தக்கது இன்றைய இளைஞர்களின் முடி அலங்காரம் திகழ்கிறது ..
சினிமாவில் ரவுடிகளே மாவீரர்களாக (ஹீரோவாக )சித்தரிக்கபடுகிறார்கள்…
அவர்கள் பேசும் வசனம் , அவர்கள் பயன்படுத்தும் வாகனங்கள், அவர்கள் அந்த வாகனத்தில் பயணிக்கு அழகு …
அவர்கள் எதிரிகளுடன் மோதக் கையாளும் ஆயுதங்கள் … இவைகளை குறிப்பிட வேண்டும் …
இன்றைக்குவெளிவரும் சினிமா படங்களை… தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பவர்கள் இளைஞர்களும், இளைஞிகளுமே பெருன்பான்மையாக
இருக்கின்றனர் .. அந்த படத்தில் கற்பனை பாத்திரங்கள் எல்லாம் (அப்துல் கலாம் சொன்ன கனவு காணுங்கள்) இளைஞர்கள் இளைஞிகள் நிஜத்தில் செயல்படுத்த காட்ட உறுதி எடுக்கிறார்கள்
1. உடையில்
2 முடியில்
3 வாகன ஓட்டும் ஸ்டைலில்
4. பணக்கார வீட்டு பெண்களை விரட்டி விரட்டி மிரட்டி மிரட்டி காதலிக்க அச்சுறுத்துவது …
5. பெண்ணின் பெற்றோர்களை குழுவாக சென்று பயமுறுத்துவது …
6. வேலை வெட்டியில்லாமல் தங்கள் பெற்றோரை மிரட்டி பணம் பறிப்பது
7. வாகனத்தில் சென்று பெண்களிடம் செயின் அறுப்பது
8. மது அருந்துவது
9. பேருந்தில், ரயிலில் பட்டத்கத்தி போன்ற ஆயுதங்களை எடுத்துச் சென்று பயணிகளை, ஓட்டுனரை கலவரம் அடைய செய்வது
இவையெல்லாம் இன்றைய சினிமா இளைய தலைமுறைக்கு கற்றுக் கொடுக்கும் பாடங்கள்



