
சீனாவுக்கு கடத்த முயன்ற 10 டன் செம்மரக்கட்டைகள் விசாகப் பட்டினம் துறைமுகத்தில் பறிமுதல் செய்யப்பட்டன. ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக் கட்டைகளின் மதிப்பு ரூ.4 கோடி என போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.அப்போது 2 கண்டெய்னர்களில் 10 டன் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவை விசாகப் பட்டினத்திலிருந்து சென்னை துறைமுகம் வழியாக கடத்த முயன்றதாகக் கூறப் படுகிறது.
செம்மரக்கட்டைகளை #சென்னை துறைமுகம் வழியாக கடத்த முயன்றதாகவும், ரூ. 4 கோடி மதிப்பிலான #செம்மரக்கட்டைகள் #பறிமுதல் செய்யப் பட்டுள்ளன என்றும், இவற்றை யார் மூலம் சீனாவிற்கு கடத்த முயன்றார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப் பட்டு வருவதாகவும் வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.



