லட்சிய திமுகவின் பொதுக்குழுவை வரும் 3-ஆம் தேதி கூட்டவுள்ளதாகத் தெரிவித்த டி.ராஜேந்தர், எத்தனையாவது பொதுக்குழு கூட்டம் என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் விழித்ததுடன், தேசிய அரசியலில் ஈடுபடப் போவதாகவும் கூறியுள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள தமது இல்லத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கருணாநிதியை அரசியல் ஆசான் எனக் கூறும் தாங்கள், பேனரில் அவரது படத்தை வைக்கவில்லையே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு விடையளிக்க முடியாமல் விழித்த அவர், பின்னர் கருணாநிதியை மனதில் வைத்திருப்பதாக கூறி சமாளித்தார். தேசிய அரசியலில் ஈடுபட முடிவு செய்திருப்பதாகவும், அதற்காக இந்தியில் படம் எடுக்க உள்ளதாகவும் டி.ராஜேந்தர் கூறினார்.
அக்.3ஆம் தேதி கட்சியின் பொதுக்குழு என அறிவித்த டி.ராஜேந்தர், எத்தனையாவது பொதுக்குழு என கேள்விக்கு பதில் தெரியாமல் விழித்த பரிதாபம்
Popular Categories




