
தாமிரபரணி நதி குப்திசிருங்கம் என்ற நகரத்தில் உள்ள ஒரு குகையில் அமைந்த துவாரத்திலிருந்து உற்பத்தியாகிறது. உற்பத்தி நிலையில் இது ஐந்து பிரிவுகளாகப் புறப்படுகிறது.
ஐந்து பிரிவுகளில் வருணை, கமலை, அம்ருததாரை என்ற மூன்று பிரிவுகள் மேற்குத் திசை நோக்கி செல்கிறது. ஏராளமான தீர்த்தக் கட்டங்கள் கொண்டுள்ளது. கல்யாண தீர்த்தம் வரை அமைந்துள்ளவை ரிஷி தீர்த்தங்கள், மற்றும் தேவதீர்த்தங்களாகும்.
மேலமைந்துள்ள இவைகள் மானிடர் நீராடுவதற்குரிய தீர்த்தங்களாக அமையவில்லை என்பது அறிதற்குரிய செய்தியாகும். மேலுள்ள மலையுச்சியில் அகத்தியர் தீர்த்தம் அகத்தீஸ்வரர் லிங்கம் உள்ளது என அறியப்படுகிறது. உத்தரவாகினியாக புறப்படும் நதி பாபவிநாசம் வரை பலதீர்த்த கட்டங்களைக் கொண்டுள்ளது.
கபிலாதீர்த்த்தை அடுத்து கல்யாண தீர்த்தம். (பாபநாச புராணத்தில் கூறப்பட்டுள்ளது). பின் பூர்வ வாகினியாகிறது. முதலில் மணிமுத்தாசங்கமம். தேவி அருள்பாலிக்கும் இடமாகும். சாலாதீர்த்தம் விக்கிரமசிங்கபுரம் புண்ணியத்துறை. காசிபத்துறை – அம்பாசமுத்திரம் ஸ்நானம் கட்டமாகும். கண்ணு வதீர்த்தம்-கல்லிடைக்குறிச்சியில் உள்ள தீர்த்தம்.
பின் உத்திரவாகினியாக திருப்புடை மருதூர் வரை, ஊர்க்காட்டில் கோஷ்டீஸ்வரதீர்த்தம், இன்னும் பலப்பல, திருப்புடைமருதூரில் உள்ள லிங்கத்தின் தென்பாகம் அமைந்தது கஜேந்திர மோட்சதீர்த்தம். பின்னர் சேரன்மகாதேவி வரை பலதீர்த்த கட்டங்கள் உள்ளது.
வைரவ தீர்த்தம்-அரிய நாயகிபுரம், துர்கா தீர்த்தம் – காருகுறிச்சி, விஷ்ணு தீர்த்தம் – கூனியூர், மார்க்கண்டேய தீர்த்தம் சேரன்மகாதேவி அருகில் உள்ளது. சேரன்மகாதேவியில் உள்ள வியதீபாத தீர்த்தத்தில், நாராயண உபநிஷதம், புருஷ சூக்தம் சொல்லி நீராடுதல் அதிக பலன். வியாசகட்டம் மிகவும் சிறந்தது.
இன்னும் பல தகவல்கள் தாமிரபரணி மகாத்மியத்தில் காண முடியும். வருத்தமடைவரைக் காப்பதற்காகவே பராசக்தி சிவ கலை ஒன்றை பெற்று வந்து மலய பர்வதத்திலிருந்து தாமிரபரணி என்னும் தீர்த்த ரூபுணியாக வெளிப்பட்டிருக்கிறாள்.
தாமிரபரணியில் வேதங்களும், பிரமாணங்களும், ஸ்மிருதிகளும்,, யாகங்களும், மந்திரங்கள், தந்திரங்களும் எல்லா காலத்திலும் வாசம் செய்து கொண்டிருக்கின்றன. நீரின்றி உலகில்லை, மனிதர்களையும், எல்லா ஜீவராசிகளும் வாழவைக்கும் நதியைப் போற்றுவோம், காப்பாற்றுவோம்.!
- விஸ்வநாதன் மீண்டாட்சிசுந்தரன்