ராஜீவ் கொலை வழக்கு கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி இளைஞர் அமைப்பினர் முதல்வரிடம் மனு அளிக்கின்றனர்

கால்நூற்றாண்டுகளாக சிறையில் வாடும் தமிழர்களை தாயுள்ளத்தோடு விடுதலை செய்ய மாணவர் இளைஞர் அமைப்புகளின் அன்பு வேண்டுகோள் என அந்த அமைப்பின் சார்பில் இயக்குனர் வ.கவுதமன் வெளியிட்ட அறிக்கையில்,

 

 

ராஜீவ் கொலை வழக்கில் சிக்கவைக்கப்பட்டு 25 ஆண்டுகளாக சிறையில் வாடும் தமிழர்களை விடுவிக்க2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்  மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அமைச்சரவையை கூட்டி முடிவெடுத்தார்.

ஆனால் அது பொறுக்காத அன்றையமத்திய அரசு உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தது. அந்தவழக்கின் தீர்ப்பில் குற்றவியல் நடைமுறை சட்ட பிரிவுகளில் முட்டுக்கட்டை போட்ட உச்சநீதிமன்றம்; அரசியலமைப்பு சட்ட பிரிவுகளின் வாயிலாக விடுதலை செய்யும் வாய்ப்பை திறந்து வைத்தது.

ஆகவே மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கருணை உள்ளத்தோடு இந்தவிடயத்தை அணுகி இந்த எழுவர் விடுதலையையும் இது போல் மிக நீண்ட காலமாக சிறையில் வாடும் சிறைவாசிகளின் விடுதலையையும் சாத்தியப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

கடந்த காலத்தில் மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளை அன்போடு செவிமடுத்து பல வரலாற்று தீர்மானங்களை இயற்றிய மாண்புமிகு முதல்வர் “அம்மா” அவர்கள், இந்த நேர்மையான வேண்டுகளையும் ஏற்று தமிழக மக்கள் மனங்களில் மகிழ்ச்சி பெருக்கெடுக்க வழி செய்யுமாறு மாணவர் / இளைஞர்அமைப்புகளின் சார்பில் வேண்டு கோள் வைக்கப்படுகிறது. என்று கூறியுள்ளார். 

இதை அடுத்து,  மாணவர் / இளைஞர் அமைப்புகளின் சார்பில் அதன் பிரதிநிதிகள் திங்கள் அன்று (11-01-2016) 11 மணி அளவில் சட்டப்பேரவை சென்று இது குறித்த ஆவணங்களை கொடுத்து மாண்புமிகு முதல்வர் “அம்மா” அவர்களை சந்திக்கின்றனர்