வெள்ள நிவாரணத்துக்கு இதுவரை சேர்ந்த நிதி ரூ.303 கோடி

சென்னை:

தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்காக மொத்தம் 17 கோடியே 10 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இன்று முதல்வரிடம் அளிக்கப்பட்டது.

அந்த வரிசையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்து, தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு கீழ்க்கண்டவர்கள் நிதியுதவி வழங்கினார்கள்.

1. ஐசிஐசிஐ வங்கியின் முதுநிலை பொது மேலாளர் மற்றும் தென் இந்திய வணிகத் தலைவர் அமித் பால்டா 10 கோடி ரூபாய்.

2. அசோக் லேலாண்ட் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வினோத் தாசரி 3 கோடி ரூபாய்.

3. அமால்கமேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் ஏ. கிருஷ்ணமூர்த்தி 2 கோடி ரூபாய்.

4. ஃபோர்டு மோட்டார் பிரைவேட் லிமிடெட்நிறுவனத்தின் இயக்குநர் ஆர். ஸ்ரீகாந்த் 1 கோடி ரூபாய்.

5. தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் எம். நாசர் 1 கோடியே 10 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்.

தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்காக மொத்தம் 17 கோடியே 10 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இன்று திங்கட்கிழமை முதல்வரிடம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெள்ள நிவாரணம் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக பல்வேறு நிறுவனங்களும், தனி நபர்களும் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.303 கோடியே 90 லட்சத்து 98 ஆயிரத்து 948 வழங்கியுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.