கருணாசைக் காவலில் எடுத்து விசாரிக்கக் காவல்துறையினர் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது. நடிகரும் திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் கடந்த 16ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர், காவல்துறை அதிகாரி ஆகியோரை மிரட்டும் வகையிலும், பிற சமூகத்தினருக்கு எதிராகவும் பேசினார் என்பது புகார். இது தொடர்பாக வழக்குப் பதிந்த நுங்கம்பாக்கம் காவல்துறையினர் ஞாயிறன்று கருணாசை கைது செய்தனர் வேலூர்ச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கருணாசை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிச் சென்னை அல்லிக்குளத்தில் உள்ள சென்னைப் பெருநகர நீதிமன்றத்தில் காவல்துறை தாக்கல் செய்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது. அதனால் வேலூர்ச் சிறையில் உள்ள கருணாசை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காகக் காவல்துறையினர் இன்று அழைத்துவர உள்ளனர். ஜாமீன் கோரிக் கருணாஸ் தாக்கல் செய்த மனுவும் நாளை விசாரணைக்கு வருகிறது.
கருணாசைக் காவலில் எடுத்து விசாரிக்கக் காவல்துறையினர் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது
Popular Categories




