svikki - 2026வண்ணாரப்பேட்டை பகுதியில் வட சென்னையில் அமைந்துள்ளது. இங்கு வசித்து வரும் துளசிராம் ஸ்விக்கி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் சொந்தமாக ஒரு இருசக்கர வாகனம் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பைக் கொள்ளையர்கள் சில தினங்களாக இவரை கண்காணித்து வந்துள்ளனர்.

நேற்று முன்தினம் இரவில் சென்னையில் பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. வாகனம் ஓட்டி சென்று கொண்டிருந்த துளசிராம் மழைக்காக ஜி.என்.செட்டி சாலையில் மூடிய கடை ஒன்றின் மறைவில் ஒதுங்கியிருந்தார்.

அங்கு போதை ஏறியவாறு 2 இளைஞர்கள் அலைந்து கொண்டிருந்தனர். செய்வதறியாத அவர்கள் தங்கள் கைகளில் இருந்த கத்தியால் துளசிராமை தாக்கியுள்ளனர். துளசிராம் கையிலிருந்து  செல்போனை பறித்துக்கொண்டு அவர்கள் தப்பி சென்றுவிட்டனர். இந்த சம்பவமானது அந்த சாலையில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. சம்பவம் அறிந்த காவல்துறையினர் சிசிடிவி கேமரா பதிவுகளை கண்காணித்தனர்.

இந்த 2 இளைஞர்கள் காசிமேடு துறைமுகம் பகுதியில் நின்று கொண்டிருந்த ஒரு இருசக்கர வாகனத்தையும் திருடியுள்ளனர். பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில் அப்பகுதி சிசிடிவி கேமராக்களை கண்டு அறிந்த காவல்துறையினர் இரண்டு சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் ஒன்று என்பதை கண்டறிந்துள்ளனர்.

நேற்று வண்ணாரப்பேட்டை பகுதியில் காவல்துறையினர் இந்த 2 இளைஞர்களையும் திருடி சென்ற வாகனத்துடன் கண்டுள்ளனர். அவர்களை பிடிக்க முற்பட்டபோது, ஒருவர் தப்பித்து விட்டார். விசாரணையின் மூலமாக பிடிபட்டவர் புதுவண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த லோகேஷ் என்பவர்.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

அவர்கள் திருடிய அனைத்து பொருட்களையும் காவல்துறையினர் அவனிடம் இருந்து மீட்டனர். மேலும் விசாரணை நடத்தியது இருவரும் இணைந்து வட சென்னையில் பிரபல ரவுடியான கண்ணனை தீர்த்துக்கட்டவும் திட்டமிட்டள்ளது வெளிவந்துள்ளது.

இந்த சம்பவமானது வடசென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending