
உங்கள் மொபைல் உதவியுடன் சமூக இடைவெளியை நீங்கள் கடைப்பிடிக்க கூகுள் ஒரு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆண்ட்ராய்ட் மற்றும் ஏ.ஆர்., வசதியுள்ள போன்களில் மட்டுமே வேலை செய்யும் இந்த எளிய தொழில்நுட்பத்தை ‘சோடார்’ (https://sodar.withgoogle.com/) என்ற தளத்தில் எவரும் பெற முடியும்.

இந்த தளத்தை அணுகினால், அது மொபைலில் உங்களுக்கு முன்னே தெரியும் காட்சியை படம் பிடிக்கும் போது, அதில், 2 மீட்டர் சுற்றளவுள்ள ஒரு வளை கோடு தெரியும். இதை வைத்து நீங்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கிறீர்களா என்பதை தெரிந்துகொண்டு அதற்கேற்றபடி நிற்கலாம்.
கடைகளுக்குப் போகும்போது கியூ வரிசைகளிலும், கூட்டமான பகுதிகளிலும் இந்த சோடார் வசதி மிகவும் உதவியாக இருக்கும்.