December 7, 2025, 8:10 AM
24 C
Chennai

அம்பானி அதிரடி: 100 கோடி பேருக்கு 4 ஜி , ஜியோ போன் இலவசமாம்

 

jio phone e1500647685244 - 2025

அம்பானியின் அதிரடி: 100 கோடி பேருக்கு 4 ஜி , ஜியோ போன் இலவசமாக வழங்கப்படும் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.

வரும் ஆகஸ்ட் 24 ஆம் தேதி முதல் ஜியோ போன் பெற பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ. 1,500 டெபாசிட் செய்து போன் பெற்றுக்கொண்டால் 3 ஆண்டுகளுக்கு பிறகு அந்த தொகை முழுவதும் திருப்பி அளிக்கப்படும்.

செப்டம்பர் மாதம் முதல் இந்த போன் கிடைக்கும். 22 இந்திய மொழிகள் ஜியோ போனில் இடம் பெறும். ஜியோ டிவி, ஜியோ மூவிஸ் உள்ளிட்ட ஜியோ சேவைகளும் இந்த போனில் இடம் பெற்றிருக்கும். மாதம் ரூ.153-க்கு அளவற்ற டேடாவை ஜியோ போன் பயனாளர்கள் பெறலாம். அதேபோல்,அனைத்து வாய்ஸ் மாற்றும் எஸ்.எம்.எஸ் சேவைகள் இலவசமாக வழங்கப்படும் என்று முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிய போனை இன்று அறிமுகம் செய்தது. மும்பையில் நடந்த அந்நிறுவனத்தின் 70வது பொதுக்குழு கூட்டத்தில் இந்த போனை முகேஷ் அம்பானி அறிமுகம் செய்தார்.

ஜியோ போன் சிறப்பம்சங்கம் :
* இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த போன் முழுக்க முழுக்க இந்தியர்களால் உருவாக்கப்பட்டது.

  • ஜியோ அறிமுகம் செய்துள்ள இந்தியாவிற்கான இன்டலிஜென்ட் ஸ்மார்ட்போன், பார்வையில் சாதாரண கீ போர்டுகளை கொண்ட போனாக இருக்கும்.

  • 4ஜி எல்டிஇ.,யான இந்த ஜியோ போன், 22 இந்திய மொழிகளை கொண்டது. மைக்ரோ எஸ்டி கார்டு கொண்டது.

  • வாய்ஸ் கமெண்ட்ஸ் மூலம் இயக்கக் கூடியது. உதாரணமாக, போனை தொடாமலேயே ஒருவரின் பெயரை மட்டும் கூறி, அவர்களை அழைக்க வேண்டும் என்ற கூறினால், அவர்களுக்கு கால் செய்யப்படும்.

  • ஜியோ போனில் மியூசிக், சினிமா உள்ளிட்ட ஆப்ஸ்கள் ஏற்கனவே லோட் செய்யப்பட்டிருக்கும். இந்த ஆப்ஸ்களையும் வாய்ஸ் மூலம் இயக்க முடியும். உங்களுக்கு தேவையான தகவல் எதுவாயினும் அதனை நீங்கள் கேட்டால், அந்த தகவல் தரப்படும்.

  • நீங்கள் எந்த மொழியில் வாய்ஸ் கமெண்ட் கொடுக்கிறீர்களோ அதை புரிந்து கொண்டு, அந்த மொழியிலேயே பதில் அல்லது பாடல் வழங்கப்படும்.

  • இந்த போனில் உள்ள 5 என்ற எண்ணை நீண்ட நேரம் அழுத்தினால், போனில் இருந்து தானாக உங்களுக்கு அருகில் இருப்பவர்கள் மற்றும் வேண்டியவர்களுக்கு நீங்கள் அவசர காலத்தில் இருப்பதற்கான மெசேஜ் செல்லும். மெசேஜூடன் நீங்கள் இருக்கும் இடமும் அவர்களுக்கு தெரிவிக்கப்படும். விரைவில் போலீஸ், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட மற்ற அவசர தேவைகளுக்கான அழைப்பு வசதிகளும் கொண்டு வரப்பட உள்ளது.

  • இந்த போனில் பிரதமரின் நமோ ஆப்ஸ் ஏற்கனவே லோட் செய்யப்பட்டுள்ளதால் பிரதமரின் மன் கி பாத் உள்ளிட்ட ரேடியோ நிகழ்ச்சிகளை எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம்.

  • இந்த ஆண்டு இறுதியில் அப்கிரேட் செய்யப்படும் இந்த போன் மூலம், உங்களின் அனைத்து கட்டணங்களையும் இதன் மூலமே எளிமையாக செலுத்தலாம்.

  • ஜியோ போனில் வாய்ஸ் கால்கள் முற்றிலும் இலவசம்.

  • ஸ்மா்ட் போன் பயன்படுத்தும் அனைவருக்கும் டிஜிட்டல் சுதந்திரத்தை அளிக்க உள்ள இந்த போன் ஆகஸ்ட் 15 முதல் விற்பனைக்கு வர உள்ளது. இதற்கான முன்பதிவு ஆகஸ்ட் 24 முதல் துவங்க உள்ளது. இலவசமாக ஜியோபோனை முன்பதிவு செய்யலாம்.

  • ஜியோபோன் பயன்படுத்துவோர் அன்லிமிடெட் டேட்டா, இலவச வாய்ஸ் கால்கள், மெசேஜ்களை மாதத்திற்கு ரூ.153 என்ற கட்டணத்தில் பெறலாம்.

  • ஜியோபோன்களை எந்த டிவி.,யுடன் இணைத்து அனைத்து டிவி சேனல்களையும் மாதம் ரூ.309 என்ற கட்டணத்தில் பார்க்கலாம்.

  • ஜியோபோன்களை டிவி.,யுடன் இணைத்து போனிற்கு வரும் தகவல்களையும் டிவி.,யிலேயே பார்க்கலாம்.

  • மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் பேக்குகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன்படி ஜியோ வாடிக்கையாளர்கள் ரூ.24 விலையில் 2 நாட்களுக்கு இலவச அன்லிமிடெட் டேட்டா உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் பெறலாம். ரூ.54 க்கு ஒரு வாரத்திற்கு இந்த சலுகைகளை பெறலாம்.

  • ஜியோ வாடிக்கையாளர்களுக்கு இந்த போன் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். மற்றவர்கள் ரூ.1500 டெபாசிட் செய்து இந்த போனை பெற்று, 3 ஆண்டுகள் பயன்படுத்தலாம். அதற்கு பின் இந்த போனை நீங்கள் திருப்பிக் கொடுத்தால், டெபாசிட் தொகை திரும்ப தரப்படும். அதாவது, 3 ஆண்டுகளுக்கு நீங்கள் பயன்படுத்தும் டேட்டா, கால்களுக்கு மட்டும் நீங்கள் கட்டணம் செலுத்தினால் போதும். போன் முற்றிலும் இலவசம்.

  • ஜியோ போன் பயன்படுத்துவோருக்கு மாதம் ரூ.153 கட்டணத்தில் அன்லிமிடெட் டேட்டா, இலவச வாய்ஸ் கால்கள், மெசேஜ்கள் வழங்கப்படும்.

  • தற்போது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு 125 மில்லியனுக்கு அதிகமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஒவ்வொரு விநாடிக்கும் 7 பேர் ஜியோ சேவைக்கு மாறிக் கொண்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Entertainment News

Popular Categories