முன்னணி நிறுவனங்கள் தயாரிக்கும் பாட்டில் தண்ணீரில் பிளாஸ்டிக் துகள் இருக்கிறது என்று ஆராய்சி முடிவுகள் தெரிவித்துள்ளன. இந்தியா, அமெரிக்கா, சீனா உள்பட 9 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக 250 வாட்டர் பாட்டில்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவை வெளியிட்டது அமெரிக்காவின் ஆர்ப் மீடியா அமைப்பு. இதில், முன்னணி நிறுவனங்கள் தயாரிக்கும் குடிநீர் பாட்டில்களில் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.
இந்தியா, அமெரிக்கா, சீனா, தாய்லாந்து, பிரேசில், இந்தோனேஷியா உள்ளிட்ட 9 நாடுகளில் உலகின் முன்னணி பிராண்ட் குடிநீர் பாட்டில்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அமெரிக்காவின் ஆர்ப் மீடியா அமைப்பு வெளியிட்டுள்ள இந்த ஆய்வின் முடிவில், 9 நாடுகளில் 19 இடங்களில் இருந்து 11 நிறுவனங்களைச் சேர்ந்த 250 குடிநீர் பாட்டில்கள் சேகரிக்கப்பட்டன.
இதில், ஒவ்வொரு லிட்டர் தண்ணீரிலும் 325 பிளாஸ்டிக் துகள்கள் இருந்தன. பரிசோதிக்கப்பட்ட 250 பாட்டில்களில் 17ல் மட்டுமே பிளாஸ்டிக் துகள்கள் இல்லாமல் இருந்தன. மற்றவற்றில் 90 சதவீதம் வரை பிளாஸ்டிக் துகள்கள் உள்ளன. இந்த பிளாஸ்டிக் துகள்கள், அந்த பாட்டிலின் மூடிகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் துகள்களாம்.
இவை குடிநீருடன் உள்ளே சென்றால், உடல் பிளாஸ்டிக் கழிவுகளைச் சுமக்கும் குப்பைத்தொட்டி ஆகி, அதனால் உடல் நல பாதிப்பு ஏற்படுமாம்!