வரலாற்றின் பக்கங்களில்: அக்பருக்கு உயிர்ப் பிச்சை அளித்த மாதரசி

Published:

akbar kirandevi portrait - 2026

இது திரிபுபடாத வரலாறு. திரித்து எழுதப்படாத உண்மைச் சம்பவம். ஓர் ஆணவக் காரானின் வாழ்க்கைப் பின்னணியைக் கூறும் வரலாற்று ஆவணம்.

மொகலாய மன்னர் அக்பர் குறித்து பள்ளிப் பாடங்களில் படித்தது நமக்கெல்லாம் நினைவிருக்கும். அவரின் ஆட்சிக்காலம் பொற்காலம் என்றெல்லாம் படித்தது நம் நினைவுக்கு வருகிறது. ஆனால், ஆனால் அக்பர் என்ற சராசரிக்கும் கீழான ஒரு மன்னனின் பின்னணியையும் தெரிந்து கொள்ளாதது நமது தவறு. சொல்லாதது அடிமை வரலாற்றாளர்கள் இம்மண்ணுக்குச் செய்துவரும் துரோகம்.

அக்பர் ஒவ்வொரு வருடமும் நவ்ரோஜ் மேளா (Nauroj Mela) என்றொரு விழா நடத்துவது வழக்கம். அந்த விழாவில் பெண்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். ஆனால் இந்த விழாவில் கலந்து கொள்வது அக்பருக்கு மிகவும் பிடித்த ஒன்று! ஆனால், தான் ஆண் என்பதால் எப்படி அதில் கலந்து கொள்வது? எனவே அக்பர் பெண் வேடமிட்டு அதில் கலந்துகொள்வாராம்.

வெறுமனே விழாவில் கலந்து கொள்வது ஒன்றும் அக்பரின் நோக்கமில்லையே! அவரின் உள்நோக்கமே, கண்ணில் அகப்படும் அழகான பெண்களை தனது பெண் வேலையாட்கள் மூலம் மனதை மயக்கும் வகையில் பேசி, தன்னிடம் அழைத்து வருவதுதான்! அவ்வாறு அழைத்து வருவது ஏன் … எதற்கு என்ற விளக்கம் சொல்லவும் வேண்டுமோ? அக்பருக்கு மனைவியர் பலர் இருந்தனர் என்கிறது வரலாறு. இருதாலும், பெண் பித்தராக இருந்ததை சில சம்பவங்கள் காட்டிக் கொடுத்து, வரலாற்றில் பதிய வைத்துள்ளன.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு; பக்தியும் பாதுகாப்பும்!

அப்படி ஒரு முறை நவ்ரோஜ் மேளா நடந்தபோது மஹாராணா பிரதாப்பின் தம்பி ஷக்தி சிங்கின் மகளும் பிக்கானேர் அரசர் பிருத்வி ராஜின் மனைவியுமான பைசா கிரண்தேவி (Baaisa Kirandevi) அந்த விழாவுக்கு அழைத்துவரப் பட்டுள்ளார். வழக்கம் போல் பெண் வேடமிட்டுச் சென்ற அக்பர், கிரண் தேவியின் அழகில் கிறங்கினார். அவரை ஜனானா மஹாலுக்கு தந்திரமாக வரவழைத்துள்ளார்.
பின்னர் அக்பர் கிரண் தேவியைத் தொட முயன்றபோது, கிரண் தேவி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை உருவி அக்பரை தாக்கி கீழே தள்ளினார். அக்பரின் நெஞ்சில் கால் வைத்து, கத்தியை கழுத்தில் வைத்துள்ளார். கீழ்த் தரமானவனே உன் கடைசி ஆசை என்ன என்று கேட்கிறார். அப்போது அக்பர் “தேவி நீங்கள் யாரென்று தெரியாமல் தவறு செய்துவிட்டேன் … என்னை மன்னியுங்கள்” என்று கதறியிருக்கிறார்.

கிரண் தேவி அப்போது ஆணையிடுகிறார் … ”இனி எக்காலத்திலும் இதுபோன்ற நவ்ரோஜ் மேளா நடத்தக்கூடாது” என்று! அவரின் மிரட்டலுக்கு ஒப்புக் கொண்ட அக்பர், அதன்பின் மேளா நடத்தவுமில்லை. உயிர்ப்பிச்சை அளித்த கிரண் தேவிக்கு நன்றி சொல்லி தப்பிக்கிறார்.

ALSO READ:  யுபிஐ கட்டணத்துக்கு வரியா? பரவும் வதந்தியும் அரசின் விளக்கமும்!

இந்த வரலாற்றுத் தகவல், கிரிதர் அஸியாவின் புத்தகம் ஸகத் ரஸோ (பக்கம் 632)ல் இடம் பெற்றிருக்கிறது.

இந்த வரலாற்று ஆவண ஓவியம் பிக்கானேர் அருங்காட்சியகத்தில் “உயிர் பிச்சை கேட்கும் அக்பரின் நெஞ்சின் மேல் கால் வைத்து … கத்தியோடு நிற்கும் கிரண்தேவி” என்ற தகவலுடன் ஒரு வரலாற்றுச் சம்பவத்தைத் தாங்கிக் கொண்டுள்ளது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img