மின்வழித் தடத்துக்காக… வெட்டி வீழ்த்தப் படும் பனை மரங்கள்!

Published:

palm-trees-cut
palm-trees-cut

தமிழ்நாட்டிற்குத் தேவையான மின்சாரத்தை அணைக்கட்டுகள், அனல்மின் நிலையங்கள் மூலம் பெறுகிறார்கள்.

தூத்துக்குடி தனியார் அனல் மின் நிலையங்கள் உற்பத்தி செய்யும் மின்சாரம் அரசுக்கு விற்பனை செய்து விட்டு, பெரும்பகுதியை தூத்துக்குடி – கீழஈரால் – சேலம் – மங்களூர் வழியாக கர்நாடகாவிற்கு விற்பனை செய்கின்றனர்.

இதற்காக அமைக்கப்படும் உயர் மின் அழுத்தக் கோபுரங்கள் விளை நிலங்கள், நீர் நிலைகள் வழியாகச் செல்கின்றன. உயர் மின் அழுத்தக் கோபுரங்களின் அருகிலுள்ள மரங்களை இதற்காக வெட்டி விடுகிறார்கள்.

palm-trees-cut1
palm-trees-cut1

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா, புதியம்புத்தூர், சாமிநத்தம், ராஜாவின்கோவில் பகுதிகளில் தனியார் நிலத்திலும், அரசு புறம்போக்கு நிலத்திலும் எந்தவித முன் அனுமதி இல்லாமல், மறு நடவு மாற்று ஏற்பாடு பற்றி சிந்திக்காமல் தனியார் நிறுவனத்தினர் பனைமரங்களை வெட்டி வீழ்த்தி இயற்கை வளங்களை சீரழித்து வருகின்றனர்.

காவல்துறை, வேளாண்மைத் துறை, வனத்துறை, வருவாய் துறை, அரசியல் தலைவர்கள் தலையிட்டால் மட்டுமே பல தலைமுறைகளை வாழ வைக்கும் பனை மரங்களைக் காப்பாற்ற முடியும்.

  • ஆர்வலன்
ALSO READ:  பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

Related articles

Recent articles

spot_img