Tamil News large 301411520220423064112

அபராதம் வித்த பெண் எஸ்.ஐ க்கு கத்தி குத்து..

திருநெல்வேலி அருகே அபராதம் விதித்ததால் பெண் எஸ்.ஐ ஒருவரை கத்தியால் குத்தி தாக்கிய சம்பவம் தொடர்பாக இன்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுத்தமல்லி அருகே கோயில் பாதுகாப்பு பணியில் பெண் காவல் உதவி ஆய்வாளர் மார்கரெட் தெரசா பணியில் இருந்தார்.அப்போது ஆறுமுகம் என்பவர் கடந்த மாதம் தனக்கு குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக அபராதம் விதித்தது குறித்து உதவி காவல் ஆய்வாளரிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.பின்னர் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்தி சரமாரி தாக்குதல் நடத்தினார்

உதவி ஆய்வாளர் படுகாயங்களுடன் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கத்திக்குத்து காயம் ஏற்படுத்திய ஆறுமுகத்தை காவல்துறையினர், 2 பிரிவுகளில் வழக்குப்பதிந்து கைது செய்துள்ளனர்.இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tamil News large 301411520220423064112

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.