
- ராமப்பா கோவிலைப் பாதுகாக்க வேண்டும்...
- எண்ணைக் கறை படிந்தாலோ தீபத்தின் கரி ஒட்டினாலோ யுனேஸ்கோ பாரம்பரிய சின்னம் ரத்தாகும் ஆபத்து.
ராமப்பா கோவிலுக்கு வருபவர்கள் ஒவ்வொரு நிமிடமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். யுனெஸ்கோ பிரதிநிதிகள் திடீரென்று வந்து தணிக்கை செய்யும் வாய்ப்புண்டு. மத்திய மாநில அரசுத் துறைகளின் ஒருங்கிணைப்பு முக்கியமான அம்சம்.
எங்கு வேண்டுமானாலும் மஞ்சள் குங்குமத்தை தெளித்தாலோ தீபமேற்றி எண்ணெய் கறையை ஏற்படுத்தினாலோ அகர்பத்தியால் கரி படிந்தாலோ ராமப்பா சர்வதேச பாரம்பரிய சின்னத்தை ரத்து செய்யும் ஆபத்து உள்ளது. யுனெஸ்கோ நிபந்தனைகள் மிகவும் கடினமாக உள்ளன.
இனி நாம் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ராமப்பாவுக்கு யூனெஸ்கோ அடையாளம் கிடைத்ததால் சிலர் அதிக உற்சாகத்தை காட்டினார்கள். பட்டாசுகள் வெடித்து கொண்டாடினார்கள். சர்வதேச அடையாளம் கிடைத்த சந்தோஷத்தை மறுப்பதற்கில்லை. ஆனால் வாய்த்த கௌரவத்தை நாமாக இழக்கக் கூடாது. இது போன்ற செயல்கள் சரியல்ல. இப்படிப்பட்ட செயல்கள் யுனெஸ்கோ பிரதிநிதிகளின் கண்ணில் தென்பட்டால் ரத்து செய்யும் ஆபத்துள்ளது.

ராமப்பா ருத்ரேஸ்வரர் ஆலயத்திற்குக் கிடைத்த சர்வதேச பாரம்பரிய சின்னம் அடையாளம் தெலுங்கு மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பல ஆண்டுகளாகத் தொடர்ந்த எதிர்பார்ப்புகள் இப்போதுதான் பயனளித்துள்ளன. இப்படிப்பட்ட நேரத்தில் அலட்சியமாக நடந்து கொண்டால் அடையாளத்தை இழக்கும் ஆபத்து மறைந்துள்ளது.
இத்தனை காலம் இஷ்டம்போல் நடந்த பொதுமக்கள் தம் பழக்கத்தை மாற்றிக் கொள்ளாவிட்டால் கிடைத்த கௌரவத்தை இழக்கும் அபாயம் உள்ளது. ராமப்பா கோவிலுக்கு அடையாளம் கிடைப்பதற்காக செய்த முயற்சிகளின் அத்தனை இத்தனை அல்ல.
யுனெஸ்கோ துணை அமைப்பான ஐகோமாஸ் பிரதிநிதி மூன்று நாட்கள் முகாமிட்டு கோவில் சுற்றுப்புறம் எல்லாவற்றையும் சல்லடை போட்டு சலித்து பார்த்தார். ஒவ்வொரு அம்சத்தையும் நோட் செய்து அறிக்கை தயாரித்தார். அதன்பிறகு ராமப்பா கோவில், பிற கட்டிடங்கள், எதனால் இந்த கோவில் பிரத்தியேகமாக ஆனதோ அதற்கான விவரங்களைத் தேடித்தேடி சேகரித்தார். அதன்பிறகுதான் பாரம்பரிய சின்னமாக முன்னோக்கி நடக்க முடிந்தது.

யுனெஸ்கோ நிபந்தனைகளின்படி புராதன கட்டடத்தின் பிரத்தியேக அம்சங்களுக்கு பங்கம் விளைவிக்கும் எந்த சின்ன மாற்றம் ஏற்பட்டாலும், கட்டடம் சிதிலம் ஏற்பட்டாலும் பாரம்பரிய சின்னம் என்ற அடையாளத்தை திரும்ப எடுத்துக் கொள்ளும் அபாயம் உள்ளது.
அதனால் யுனெஸ்கோ பிரதிநிதிகள் திடீரென்று இது தொடர்புடைய இடங்களுக்கு தணிக்கை செய்வதற்கு வந்து போய்க் கொண்டிருப்பார்கள். இப்போது ராமப்பா ஆலயத்திலும் அவ்வாறு தணிக்கை செய்ய வரப் போகிறார்கள். அதனால் யுனெஸ்கோ அளித்த அடையாளத்தை காப்பாற்றிக் கொள்வதற்கு சிரத்தையோடு நாம் நடந்து கொள்ள வேண்டிய தேவை உள்ளது.
ராமப்பா ருத்ரேஸ்வர ஸ்வாமி சிவாலயம் ஆனதால் கார்த்திகை மாதத்தில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வருவார்கள். ஆலயம் சுற்றுப்புறத்தில் தீபம் ஏற்றி வழிபடுவார்கள். சில ஆண்டு காலமாக உள்ளூர் அதிகாரிகள் நடவடிக்கையால் இவை கொஞ்சம் குறைந்தாலும் ஆலயத்தில் எங்கு வேண்டுமானாலும் தேங்காய் உடைப்பது, விக்கிரகங்களின் மீது மஞ்சள் குங்குமத்தை இடுவது, விபூதியை தெளிப்பது போன்றவை நடந்து வருகின்றன. இனி இவை எல்லாம் யுனெஸ்கோ அடையாளத்திற்கு பிரச்சனையாக மாறும் வாய்ப்புள்ளது.
ஆனால் பக்தர்களின் மனநிலைக்கு வருத்தம் நேராமல் யனெஸ்கோ சில விதிமுறைகளை ஏற்படுத்தியுள்ளது. அவற்றை அனுசரிக்கும் படி பார்த்துக் கொண்டால் போதும். பூஜைகளை ஏற்கும் விக்கிரகங்களின் அருகில் அர்ச்சகர்கள் மஞ்சள் குங்குமம் பூக்களால் பூஜை செய்யலாம். அங்கு மட்டும் தீபங்களை ஏற்றலாம். பிற இடங்களில் அவ்வாறு செய்யக்கூடாது.
பண்டிகை நேரங்களில் ஆலயத்தின் மீது இஷ்டம் வந்தார் போல் மின்சார விளக்குகள் ஏற்றக்கூடாது.
கட்டடத்திற்கு 100மீட்டர் எல்லையில் வரை தடை செய்யப்பட்ட பகுதியாக யுனெக்கோ நிபந்தனை உள்ளது. அந்த எல்லையில் தற்காலிக கட்டடங்களை எழுப்புவதற்கு இடமில்லை.
ஆனால் ராமப்பா கோவில் அருகில் அடிக்கடி சபைகள் மீட்டிங்கில் அரசியல் கூட்டங்கள் நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்தி வந்தார்கள். இனி இது போன்றவை நடப்பதற்கு வழியில்லை. தடை செய்யப்பட்ட இடத்திற்கு அப்பால் மற்றும் ஒரு நூறு மீட்டர் இடம் தடைசெய்யப்பட்ட எல்லையாக கருதப்படும். அந்த எல்லைக்கு அப்பால் நிபந்தனைப்படி அனுமதி பெற்று சில நிகழ்ச்சிகளை நடத்தலாம். ஆனால் ஆலயத்திற்கு சிறிதும் சிக்கல் விளையாத படி நடக்க வேண்டும்.
ராமப்பா கோவில் தற்போது மத்திய அரசின் அதிகாரத்தில் உள்ள ஆர்க்கியாலஜிகல் சர்வே ஆஃப் இந்தியா ஏஎஸ்ஐ கையில் உள்ளது. கோவில் பரந்துள்ள 20 ஏக்கர் இடத்தில் எல்லாவற்றையும் ஏஎஸ்ஐ கண்காணிக்கும். அந்த எல்லைக்குப் பிறகு வளர்ச்சிப் பணிகளை மாநில அரசாங்கம் செய்து வருகிறது.

தற்போது உள்ள சூழ்நிலையில் மத்திய மாநில அரசுப் பிரிவுகள் இடையே முழுமையான ஒத்துழைப்பு தேவை. ஆலயத்தில் பூஜைகள் மாநில அறநிலையத்துறை கையில் இருக்கும் . அவைகூட ஏ எஸ் ஐ நிபந்தனைகளுக்கு உட்பட்டே நடக்க வேண்டும்.
மாநில அரசாங்கம் ராமப்பா அருகில் மியூசியம், தியான மையம், சில்பாராமம் போன்றவற்றோடு கூட பல கட்டடங்களை அமைக்கும் ஆலோசனையில் உள்ளது. அவை ஏஎஸ்ஐ நிபந்தனைகள் படி நடக்க வேண்டும். இந்த விஷயத்தில் மத்திய மாநில பிரிவுகளிடையே ஒன்றிணைப்பு குறைந்தால் யுனெஸ்கோ அடையாளம் ரத்து ஆவதற்கு வாய்ப்பு உள்ளது.
மாநில அரசாங்கம் அண்மையில் யுனெஸ்கோ குறிப்பிட்டபடி பாலெம்பேட்ட டெவலப்மென்ட் அதாரிடி மாநில அளவில் முக்கிய துறைகளில் ஒன்றிணைந்து கமிட்டிகளை ஏற்பாடு செய்தது. இவையெல்லாம் கூட ஒத்த கருத்து ஒற்றுமையோடு பணிபுரிய வேண்டும்.
பக்தர்களுக்கான வசதிகள், சாலை நிர்மணம் போன்றவற்றை கோவிலுக்கு சிக்கல் ஏற்படுத்தாத வகையில் மாநில அரசாங்கம் செய்ய வேண்டி உள்ளது. இவற்றை வரும் ஆண்டு டிசம்பருக்குள் பூர்த்தி செய்ய வேண்டும். யுனெஸ்கோ குறிப்பிட்ட அந்த வேலைகளில் சற்றும் கூட அலட்சியம் காட்டாமல் நடத்தவண்டும்.
ட்ரெஸ்டன் எல்ப் வாலி என்பது ஜெர்மனியில் உள்ள ஒரு வரலாற்று சிறப்புமிக்க நகரம். 2004இல் அதற்கு கலாச்சார லேண்ட்ஸ்கேப் ஆக யுனெஸ்கோவின் சர்வதேச பாரம்பரிய அடையாளம் கிடைத்தது. 16- 20 ம் நூற்றாண்டுகளின் இடையில் நடந்த அற்புதமான வரலாற்று கட்டிடங்கள் அந்த நகரத்திற்கு பிரத்தியேகமான சிறப்பாக விளங்கின.
ஆனால் அங்கு அரசாங்கத்திற்கும் அதிகாரிகளுக்கும் இடையே கருத்து ஒற்றுமை குறைந்தது. போக்குவரத்து பிரச்சினைக்கு மாற்ற வழி என்று கூறிக்கொண்டு அங்கு புதிதாக ஒரு பாலத்தை கட்டினார்கள். அதனால் அந்த இடத்தின் சிறப்பிற்கு பங்கம் நேர்ந்தது என்று கூறி யுனெஸ்கோ பாரம்பரிய அடையாளத்தை ரத்து செய்துவிட்டது.