மதுரை காமராஜர் பல்கலை., பேராசிரியர் பணி நியமன முறைகேடு தொடர்பில் விசாரணை!

Published:

mk university
mk university

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் பதவி உயர்வு, பணி நியமனத்தில் முறைகேடு தொடர்பாக  ஐ.ஏ.எஸ். அதிகாரியின் தலைமையிலான குழு விசாரணை மேற்கொண்டது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 2018 ஆம் ஆண்டுக்கு முன்பு  பேராசிரியர்கள் பதவி உயர்வு மற்றும் அவர்களின் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்த நிலையில்., அதுதொடர்பாக 2018 ஆம் ஆண்டிற்கு பிறகு புதிதாக பொறுப்பேற்ற பல்கலைக்கழகத் துணைவேந்தர் கிருஷ்ணன் பொறுப்பேற்றார்.

பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்றம் பல்கலைக்கழகத்தின் முறைகேடு குறித்து, கடந்த ஆண்டு நீதியரசர்கள் அக்பர் அலி தலைமையில் கமிஷன் அமைக்க உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து,விசாரணை கமிஷன் விசாரணை  நிறைவடைந்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னரும், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில், தமிழக அரசு மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் உட்பட மூன்று பல்கலைக் கழகங்களில், நடைபெற்ற முறைகேடுகளை விசாரிக்க , ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையில் குழு அமைத்து விசாரணை செய்ய உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், உயர்கல்வி துறை இணைச் செயலாளர் கார்த்திகா  தலைமையிலான குழுவினர் , பல்கலைக்கழகத்தில் விசாரணையை துவக்கினர். இந்த விசாரணையில், பேராசிரியர்கள் பணி நியமன பதவி உயர்வில் நடைபெற்ற முறைகேடு ,மற்றும் அக்பர் அலி கமிஷன் பரிந்துரை ஆகியவற்றை ஆய்வு செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

இந்த விசாரணையில், பல்கலைக்கழகத்தின் முறைகேடு குறித்து, துணைவேந்தர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது. மேலும், விசாரணை முடிந்த பிறகே பல்வேறு தகவல்கள் வெளிவரும் என, ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Related articles

Recent articles

spot_img