அருவியில் நனைந்து ஆட கவர்ச்சி உடைக்கு நோ சொன்ன நடிகை

Published:

இதுவரை இப்படி எல்லாம் டிரெஸ் போட்டு ஆடியதில்லை, எனவே நான் இப்படி ஆட மாட்டேன் என்று கவர்ச்சி உடைக்கு நோ சொல்லியுள்ளார் நடிகை மாளவிகா மேனன்.

சிலந்தி, ரணதந்த்ரா படங்களை அடுத்து ஆதிராஜன் இயக்கி வரும் படம் அருவா சண்ட. இந்தப் படத்தின் ஹீரோயின் அறிமுகப் பாடல் காட்சி அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் நடந்தது. தரண் இசை அமைக்க, வைரமுத்து எழுதியுள்ள பாடல் ’ஆற்றில் ஒரு மீனாக காட்டில் ஒரு மானாக…’ என்ற பாடல். அனுராதா பட் பாடியுள்ள இந்தப் பாடலின் படப்பிடிப்புக் காட்சியில் கதாநாயகி மாளவிகா மேனன் அணிந்து கொள்ள மிக கவர்ச்சியான ஆடையைக் கொடுத்துள்ளனர். அதைக் கண்டு முகம் சுளித்துள்ளார் மாளவிகா. ஆனால், அதை அணிந்துதான் ஆட வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்துள்ளார் இயக்குனர்.

அதற்கு மாளவிகா, தான் இப்படிப்பட்ட டிரஸ் அணிந்து ஆடியதில்லை என்று பிடிவாதமாக மறுத்துவிட்டார். இந்தப் பிரச்னையால், சுமார் ஒரு மணி நேரம் படப்பிடிப்பு பாதிக்கப்பட, நடன இயக்குநர் ராதிகா மாளவிகாவுக்கு புரியவைக்க முயற்சி செய்தார். ஆனால் மாளவிகாவின் பிடிவாதத்தால், வேறு சில உடைகளை தைத்துக் கொடுத்தார் இயக்குநர். பின்னர் ஓரளவு சமாதானம் அடைந்த மாளவிகா கொட்டும் அருவியில் நனைந்தபடி ஆடினாராம்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

Related articles

Recent articles

spot_img