
வெற்றி பெறும் ஆர்வம்
இன்றைய உலகம் முரட்டு சக்திகளின் போர் அரங்கம். அங்கு நல்ல தன்மையும் நற்குணங்களும் மட்டும் ஒருபோதும் வெற்றி கண்டு விட முடியாது.
அதனால்தான், கடந்த ஆயிரம் ஆண்டுகளாக எவ்வளவோ பக்தி, நற்பண்பு, பணிவு உடையவர்களாக இருந்தும் நம் முன்னோர்கள், நற்பண்பு என்பதை வாசனையையும் அறியாத ஆக்கிரமிப்பாளர்களால் நசுக்கப்பட்டு வந்துள்ளதை காண்கிறோம்.
அந்த ஆக்கிரமிப்பாளர்கள் பண்பில் குறைந்தவர்களாக இருந்தாலும், அரிய சாதனைகள் புரிய துடிக்கும் உணர்வு கொண்டவர்களாகவும் ஒன்றுபட்டு இயங்கும் தன்மை பெற்றவர்களாகவும் , ரஜோகுணம் உடையவர்களாகவும் இருந்ததால் எளிதில் நம்மை முறியடித்தார்கள்.
ஆனால், நம் முன்னோர்கள் வெற்றி காணும் நோக்கத்துடன் வீறுடன் செயல்பட்டபோது அரக்கர் சாம்ராஜ்யம் அழிக்கப்பட்டதைச் சரித்திரத்தில் காண்கிறோம்.
உண்மையில், ‘ வீரபோக்யா வசுந்தரா ‘ ( வீரர்களுக்கே இவ்வுலகம்) என்ற வாக்கியத்தில் இவ்வுலகில் வெற்றிகரமான வாழ்வுக்கான சூட்சுமம் பொதிந்திருக்கிறது.
— குருஜி மாதவ சதாசிவ கோல்வல்கர்