நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப் பாளர் சீமான் வலைத்தளங்களில் அதிகம் வறுபடும் நபர்களில் ஒருவராக இருக்கிறார். அண்மைக் காலமாக, சீமானின் பழைய பேச்சுகள் அடங்கிய வீடியோக்கள், ஒலிப் பதிவுகளை சிறு சிறு பகுதிகளாக வெட்டி ஒட்டி, மீம்ஸ் போட்டு வறுத்துத் தள்ளும் வேலையை கச்சிதமாகச் செய்து வருகின்றனர் சிலர்.
முப்பாட்டன் முருகப் பெருமான் என்று சொல்லி, வேல், முருகன் ஆகியோரை மோசமாக சித்திரித்து அரசியர் செய்தார் சீமான்.அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. சீமான், கிண்டல் கேலிக்கு உரிய நபர் ஆனார். ஆஸ்திரேலியாவில் இருந்து அரிசி கடத்தியபோது… என்று ஒரு வீடியோ அண்மையில் உலா வந்தது.
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுடன் அமர்ந்து ஆமைக்கறி சாப்பிட்டேன் என்று அவர் சொன்னது அடுத்த ஹைலைட்டாக ஊடகங்களில் விவாதிக்கப் பட்டது. தற்போது லேட்டஸ்டாக, சோழனைப் பற்றி அவர் குறிப்பிட்ட வார்த்தைகள் கிண்டலுக்குரியதாக மாறியுள்ளது.
ராஜராஜ சோழனிடம் குதிரைப் படை இல்லை என்றும், இருந்ததெல்லாம் யானைப் படைதான் என்றும், ஒரு கப்பலில் அறுபதாயிரம் யானைகளை ஏற்றிச் சென்றிருந்தார்கள் என்றும், யானைகளுக்கு உரிய பாகன்கள், சோறு, சாப்பாடு, பாகன்களுக்கு சோறு, பணி ஆட்கள் என்று இவ்வளவும் கப்பல்களில் வைத்துக் கட்டி வெளி நாடுகளுக்குச் சென்றான் என்று கூறும் சீமானின் பேச்சை இப்போது வலைத்தள வாசிகள் வறுத்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.




