சுட்டெரிக்கிற வெய்யிலுல… சுட்டுத் தள்ளுறோம் பாருங்க…!

Published:

dosainheat - 2026வட மாநிலங்களில் வெய்யில் சுட்டெரிக்கிறது. சுட்டெரிக்கும் சூரியன் கதிர்களைத் தாங்கிக் கொண்டு தேர்தல் பிரசாரமும் களை கட்டுகிறது.

அனல் காற்றின் கடுமையில் வருந்தோறும் பலர் உயிரிழப்பது வாடிக்கை ஆகிவிட்டது. இந்த வருடம் மாறாக மின்னல் வெட்டால் உயிரிழந்திருக்கின்றனர் பலர். இத்தகைய சூழலிலும், தங்கள் வாழ்க்கை முறையை நகைச்சுவையாக வெளிப்படுத்தி வருகின்றனர் சமூக வலைத்தளங்களில்.

அடிக்கிற வெய்யிலுல எல்லாம் காஞ்சி கருவாடா போயிடிச்சி… என்று சொல்வதைக் கேட்டிருக்கிறோம். அந்த வெயில்லையும் நாங்க உபயோகமா பயன்படுத்திக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு, தமிழக கிராமங்களில் மட்டுமல்ல சென்னை போன்ற நகரங்களிலும் கூட வீட்டின் மொட்டை மாடியில் ஒரு வருடத்துக்குத் தேவையான வத்தல், வடகம் எல்லாம் போட்டு வெயிலில் காயவைத்து எடுப்பது வழக்கமான ஒன்றுதான்.

இதற்கு ஒரு படி மேலே போய், நாங்க இந்த வெயில்ல எவ்ளோ உபயோகமா பயன்படுத்திக்கிறோம் பாருங்க.. என்று சுட்டெரிக்கும் வெயிலில் சூடான இருசக்கர வாகனத்தின் சீட்டில் தோசை மாவை ஊத்தி, அதில் எண்ணெய் விட்டு, சுளுவாக சுட்டு எடுக்கிறார் ஒருவர்.

இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒருவர் இதுதான் எங்க ஊரு நிலைமை என்கிறார். சென்னையைச் சேர்ந்தவர் இதான் நம்ம ஊரு நெலம என்கிறார்.

 

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img