ஏண்டா விச்சு… இப்படி ஆடு மாதிரி மே மேன்னு கத்திண்டு இருக்க…? கடுப்பான கவிஞர்…!

Published:

msv kannadasan bw - 2026

1975-ல் வெளியான நடிகர் திலகத்தின் 175வது படமான ” அவன் தான் மனிதன்” திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்.

இப்பாடல் குறித்த சுவாரஸ்ய நிகழ்வொன்று உண்டு. இப்படத்தில் அனைத்து பாடல்களும் தயாராகி விட்ட நிலையில் முழுக்க சிங்கப்பூரில் படமாக்க வேண்டிய இப்பாடலை கவிஞர் கண்ணதாசன் எழுதி தரவில்லை.

மே மாதம் படப்பிடிப்பிற்கு தயாரான நிலையில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.,  கவிஞர் கண்ணதாசனைப் பார்க்கும் போதெல்லாம் அண்ணே மே மாதம் ! மே ! மே ! என்று நச்சரித்து வந்தார்.

கடுப்பாகிப் போன கவிஞர், என்னடா விச்சு எப்ப பார்த்தாலும் மே! மே! னு ஆடு மாதிரி கத்திக்கிட்டு இருக்க. நீ மே தான கேட்ட.. இந்தா போட்டுக்கோ மே மே… என்று பாடலின் ஒவ்வொரு வரியும் மே என முடியும் வகையில் பாடலை எழுதிக் கொடுத்தார்.

இது மே மாதம் இல்லையா அதற்கான பாடல் இது. இந்தப் பாடலில் அனைத்து வரிகளும் மே மே என்று முடியும்!

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

Related articles

Recent articles

spot_img