நான் யார்..? தெளிந்த ஆன்மிகச் சிந்தனை!

Published:

krishna arjuna rath - 2026

நான் (ஆன்மா) !

நான் தெளிந்த அறிவோடிருக்கிறேன்..

நான் = அறிவாகிறேன் நான் !

மாயையினால் உண்டாகும் கலக்கங்களே குழப்பங்கள் !

நான் .. அவைகளுக்கு எதிர்த்தட்டாக இருக்கிறேன் !

எங்கும் பரவிய உண்மை என்னை வழி நடத்தட்டும் !

நான் உண்மைப் பொருள் !

நான் உண்மையாகிறேன் !

நிகரற்ற சக்தியும் ஆக்கபூர்வமான சிந்தனைகளும் உடையவனாக இருக்கிறேன் !

என் பகைவர்களை நன்கு அறிந்திருக்கிற நான் !

நான் அஞ்ச வேண்டியது உட்பகைக்கே ( = தீய குணங்களுக்கே ) என்பதனை உணர்ந்துள்ளேன் !

நான் .. இறைவனால் வழி நடத்தப்படுகின்ற நான் .. இது மட்டுமே என்னுள் நிழலாடினால் ; என்றும் நான் ‘தனித்துவமிக்க நான் – ஆக’ நான் இருப்பேன் !

நான் – கருணையும் பொறுமையும் வீரமும் விவேகமும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற நான்..

நான் – காரியத்தில் குறியாக ; நேர்த்தியாகச் செயல்படும் நான்..

நான் – நற்செயல்களால் ஓரோர் கணமும் என்னையே வெல்லும் நான்.

Sri U.Ve Thirumalai Ananthan Pillai Akkarakkani Srinidhi Swami With his Thiruttagappanaar (in the framed photo )

நான் – ( எதிரிகளே – மாயையே ) உங்கள் வஞ்சக வலையில் வீழாத நான் !

ALSO READ:  இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடி மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

இன்ப துன்பங்களால் துவளாத நான் !

நீ அழிக்க , ஒழிக்க நினைத்தாலும் அழியாத ஒழியாத நான் !

நானாக நான் ; என்றும் நான் !

  • விளக்கம்: உபந்யாசகர் அக்காரக்கனி ஸ்ரீநிதி 

Related articles

Recent articles

spot_img