செய்திகள்… சிந்தனைகள்… – 26.12.2019

லக்னோவில் வாஜ்பாயின் முழுஉருவ சிலையை திறந்து வைத்தார் மோடி.

CAA வை சிவசேனா தொடர்ந்து எதிர்த்துவரும் நிலையில் அக்கட்சி எம்.பி ஹேமந்த் பாட்டில் CAA வை ஆதரிப்பதாக கூறியுள்ளார்.

CAA வுக்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு வழங்கும்படி 28 பேருக்கு உ.பி அரசு நோட்டிஸ்.

போராட்டத்தை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டிருந்த 16000 க்கும் அதிகமான பதிவுகளை உ.பி போலீசார் நீக்கியுள்ளனர்.

CAA வுக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்ட ஜெர்மன் மாணவன் விசா விதிமுறைகளை மீறியதாக திரும்ப அனுப்பப்பட்டார்.

நாட்டிலேயே முதல்முறையாக மூன்றாம் பாலினத்தவர்களுக்கான பிரத்யேக கல்லூரி உ.பி யில் தொடங்கப்படவுள்ளது.

- Advertisement -