ஸ்ரீரங்கம் நம்பெருமாள் உத்ஸவம் படியேற்ற சேவை

ஆன்மிகக் கட்டுரைகள் திருச்சி விழாக்கள் விசேஷங்கள் வீடியோ

திருவரங்கம் நம்பெருமாள் புறப்பாடுகளில் ஸ்ரீபாதம் தாங்குவார்கள் மிக அழகிய பல வித நடை போட்டு வருவது காண்பதற்கே மிக நன்றாக இருக்கும்.

அதை போலவே “படியேற்ற சேவை”… படிகளில் அரையர் பண் இசைக்க தாளத்துடன் இருபுறமும் கைகளில் ஏந்தி அசைந்து  அசைந்து, பெருமாளை படிகளில் எழுந்தருளப்பண்ணும் அழகே தனி. இதனைக் காணக் கண் கோடி வேண்டும்.

ராப்பத்து நாட்களில் நம்பெருமாள் அரையர் நாழிகேட்டான் (பித்தளை படி, தங்க கம்பத்தடி அருகில்) ஒரு முறையும் , பின்னர் வீணை ஏகாந்தம் என்கிற வீணை மீட்டி பாடிக் கேட்ட பின் சந்தனு மண்டபத்தின் மேற்புற படியில் வீணை இசைக்கு அசைந்து ஏறும் அழகும் வெகு சிறப்பு!

வீணை ஏகாந்த பாடல்களை பதிவு செய்ய அந்த கைங்கரியம் செய்யும் குடும்பத்தார் அனுமதிப்பதில்லை. இந்தப் படியேற்ற சேவையை மட்டும் ஒலியுடன் பதிவு செய்ய வேண்டி அவர்களிடம் அனுமதி பெற்று நமது வாசகர்களுக்காக இங்கே தருகிறோம். இதை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அரங்கன் அருள் பூரணமாய் நிறையட்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.