ஏழைகளை கமல் மாடியில் இருந்து பார்க்கிறார்; நாங்கள் குடிசையில் இருந்து பார்க்கிறோம்: ஜெயக்குமார்

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை

மக்கள் நலத் திட்டங்களை கைவிடச் சொல்கிறாரா கமல்? என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், கமல் ஏழைகளை மாடியின் நின்று பார்க்கிறார், நாங்கள் குடிசையில் நின்று பார்க்கிறோம் என்று கூறினார்.

சென்னை மயிலாப்பூரில் இலவச வேட்டி சேலை திட்டத்தை துவக்கி வைத்தார் அமைச்சர் ஜெயக்குமார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், அரசுக்கு நிதி நெருக்கடி இருந்தாலும் மக்கள் நலத் திட்டங்கள் சரியாக செயல்படுத்தப் படுகின்றன.

ஏழை மக்களின் கஷ்டங்களை கமலால் உணர முடியாது. அவர் ஏழை மக்களின் கஷ்டங்களை மாடியிலிருந்து பார்த்தால் தெரியாது. அந்தக் கஷ்டங்களை அவரால் உணரவும் முடியாது. ஏழை மக்களை கமல் மாடியிலிருந்து பார்க்கிறார். நாங்களோ குடிசையில் இருந்து பார்க்கிறோம்.

மக்கள் நல திட்டங்களை கைவிட வேண்டும் என்று சொல்கிறாரா கமல்? அவரின் கருத்தில் உள்நோக்கம் இருப்பதாகவே கருதுகிறேன். அதற்கு பதில் சொல்ல தயாராக இல்லை என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.