நீங்கள் புதனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். பிறவி புத்திசாலிகள். தன்பலம் இருந்தாலும் தெய்வபலத்தையும் தேடிபிடிப்பீங்க. உங்கள் எண்ணங்கள் எப்போதுமே வண்ணங்கள் தீட்டியது போல் அழகாக இருக்கும். வாழ்வாங்கு வாழவும், மற்றவர்களை வாழவைக்கவும் விரும்புவீங்க. எளிதில் கிரகித்து கொள்ளும் உங்களுக்கு இந்த தமிழ் புத்தாண்டு தரும் செய்தி என்ன?
புத்தாண்டின் துவக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புகளோடு காத்திருக்கிறீர்கள். அடுத்தடுத்து நடந்த சில சம்பவங்கள் உங்களை நிறையவே யோசிக்க வைத்து விட்டது. இது தற்காலிகமா, அல்லது இப்படித்தான் இனிவரும் காலம் இருக்குமா என்று கூட சின்ன ஐயப்பாடு மனதில் எட்டிப் பார்த்தது. அதை அவ்வப்போது குட்டி வைக்கவும் தயங்கவில்லை. என்றாலும் அதையும் மீறி ஒரு பயம், பதட்டம், இருந்தது. அதனால் இந்த புத்தாண்டு என்ன செய்யுமோ என்கிற கேள்வியை பலமாக எழுப்புகிறது. கவலை வேண்டாம்.
மிதுனம் ராசி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2018
Popular Categories



