சத்தியமங்கலம் அடுத்த காரப்பள்ளம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் 108 ஆம்புலன்ஸில் பேட்டரியில் ஏற்பட்ட கோளாறில் தீப்பிடித்தது. உள்புறம் எரிந்து நாசம்: ஒட்டுநர் வெற்றிவேல், உதவியார் சங்கர் உயிர் தப்பினர். ஆசனூர் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
நோயாளியை கொண்டுவிட்டு திரும்பும் வழியில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. அதனால் உயிர்ச்சேதம் ஏதும் இல்லை என போலீசார் தெரிவித்தனர்.



