தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பேருந்து நிலையம் அருகே தனியார் விடுதி செயல்பட்டு வருகிறது . இந்த விடுதியில் சென்ற வாரம் கேரள மாநிலத்தைச் சேர்ந்த வேணுகோபாலன் என்பவர் வேலை தேடி வந்துள்ளார். இவர் தனியார் தங்கும் விடுதியில் தங்கி வேலை தேடியுள்ளதாக தெரிகிறது.
கடந்த சில நாட்களாக வேணுகோபாலன் வெளியே வந்து சென்றுள்ளார். இந் நிலையில் கடந்த இரு தினங்களாக வேணுகோபாலன் தங்கியிருந்த அறை திறக்கப் படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் வேணுகோபாலன் தங்கியிருந்த அறை அருகே சென்று பார்த்தனர். அங்கே துர்நாற்றம் வீசியது இதனை அடுத்து விடுதி ஊழியர்கள் பென்னாகரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
காவல்துறையினர் விரைந்து வந்து ஊழியரின் உதவியுடன் அறையின் கதவை திறந்து பார்த்தபோது அங்கு வேணுகோபாலன் கவிழ்ந்த நிலையில் உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் பிணமாகக் கிடந்துள்ளார். பின்னர் போலீசார் வேணுகோபாலன் உடலை பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .
இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ள போலீஸார் அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.




