
தெலங்கானா மாநிலத்தில் அரசு பஸ் ஒன்று மலைப் பாதையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 பேர் உயிரிழந்தனர்.
தெலங்கானா மாநிலம் ஜாகித்யாலாவிலிருந்து கொண்டகட்டு பகுதியை நோக்கி 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் மாநிலஅரசு பஸ் ஒன்று சென்றுகொண்டிருந்தது. கொண்டகட்டு மலைப் பாதையில் சென்ற போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

இந்த விபத்தில் சிறுவர்கள் 8 பேர் உள்பட 30 பேர் உயிரிழந்தனர். மற்றவர்கள் பலத்த காயமடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், கிராம மக்களின் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவனையில் சேர்த்தனர்.
மாவட்ட ஆட்சியர் சரத், காவல் கண்காணிப்பாளர் சிந்துசர்மா ஆகியோர் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்து வந்து, ஆய்வு செய்தனர். காயமடைந்த சிலர் அபாயக் கட்டத்தில் இருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பஸ் முறையான பராமரிப்பு இல்லாததாலேயே இவ்வாறு விபத்துக்கு உள்ளானதாக கூறப்படுகிறது.



