
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனின் 61 வது நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக, திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சியினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சந்தைப்பேட்டை அருகே தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடம் அமைந்துள்ளது. அவரது நினைவு தினம் இன்று செப்.11 அனுசரிக்கப்படுகிறது.
இதை ஒட்டி, அதிமுக சார்பில் அமைச்சர்கள் மணிகண்டன், ராஜலெட்சுமி தலைமையில் அதிமுக வினர் அஞ்சலி செலுத்தினார்கள். திமுக சார்பில் முன்னால் அமைச்சர்கள் தமிழரசி , சுப.தங்கவேலன், முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் பவானி ராஜேந்திரன் தலைமையில் திமுக தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் மேலும் மதிமுக சார்பில் சதன் திருமலை குமார் தலைமையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநில துணைப் பொதுச் செயலாளர்கள் கலைவேந்தன், கனிஅமுதன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அஞ்சலி செலுத்தினார்கள்.
நாம் தமிழர் கட்சி சார்பில் ஒருங்கிணைப்பாளர்கள் வெற்றிமாறன், சிவகுமார் தலைமையில் கட்சியினர் மலர்மாலை வைத்து மரியாதை செலுத்தினார்கள். தமிழ் மாநில காங்கிரஸ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தேமுதிக சார்பிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.



