கன்னியாகுமரி மாவட்டத்தில் பேரிடர் தொடர்பான பணிகளை கண்காணிக்க கண் காணிப்பு அலுவலராக ஜோதி நிர்மலா ஐஏஎஸ். நிர்ணயிக்கப்பட்டுள்ளார்.
வட்டத்தில் 85 தற்காலிக நிவாரண முகாம்கள் தயார் நிலையில் அமைக்கப் பட்டுள்ளது. மாவட்டத்தில் 76 தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டு 9 மண்டல அளவிலான அனைத்து துறை அலுவலர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளது.
760 உள்ளூர் கிராம மக்கள் இந்த கண்காணிப்பு பணிகளில் இணைக்கப் பட்டுள்ளனர். நீர்நிலைகளில் உடைப்பு ஏற்பட்டால் அதனை தடுக்கும் விதமாக 7720 மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இரண்டு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் நாளை காலை சுமார் 8 மணியளவில் குமரி மாவட்டத்திற்கு வந்தடைவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.
கனமழை தொடர்பாக பரவும் வதந்திகளை பொதுமக்கள் நம்பவேண்டாம் என்று குமரி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப் பட்டுள்ளது
மீன்துறை உதவி இயக்குனர் ~ 04652 227460
ஆட்சியர் அலுவலகம் ~ 1077, 04652 231077
வள்ளவிளை ~ 9489210152
சின்னத்துரை ~ 9597550066, 830022238
குளச்சல் மீன்பிடித்துறை அலுவலகம்~ 04651 228696




