இனி இந்த தியேட்டர்ல தமிழ் படம் ரிலிஸ் இல்லை ! நேர்கொண்ட பார்வையால் எதிர்மறை விளைவு!

Published:

nkp 3 - 2026தல அஜித் நடிப்பில் கடந்த 8-ம் தேதி வெளியான படம் நேர்கொண்ட பார்வை. வினோத் இயக்கியுள்ள இந்த படம் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வசூலிலும் வாரியது.france - 2026இந்த படம் பிரான்ஸில் உள்ள லீ கிராண்ட் ரெக்ஸ் திரையரங்கில் வெளியாகியுள்ளது. அங்கு அஜித் ரசிகர்கள் இந்தியாவில் செய்வது போல நடனமாடுவது மற்றும் ஸ்கிரினில் அஜித் வரும் பொது அவர் காலில் விழுவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஸ்கிரின் கிழிந்து போனது.france 1 - 2026ஸ்கீரினை மாற்ற 7000 யூரோக்கள் (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.5.5 லட்சம்) நஷ்ட ஈட்டை விநியோகஸ்தர்களிடம் திரையரங்க நிர்வாகம் கோரியுள்ளது. விநியோகஸ்தகர்களும் இதற்கு ஒப்புக்கொண்டுள்ளனர்.
france3 - 2026அதனால் இனிமேல் இந்த திரையரங்குகளில் தமிழ் படம் வெளியாகாது என்று அவர்கள் அறிவித்துள்ளனர். முன்னதாக இந்த திரையரங்குகளில் ‘சர்கார்’, ‘பேட்ட’, ‘விஸ்வாசம்’ என முன்னணி நட்சத்திரங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.france 2 - 2026ரசிகர்களின் இந்தச் செயலைக் கண்டித்து, பிரான்ஸ் விநியோகஸ்தர்கள் அமைப்பான EOY என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் ட்விட்டரில் வீடியோ பதிவிட்டுள்ளது.சும்மாவே இணையதளத்தில் தள – தளபதி ரசிகர்கள் மோதல் தூக்கலாக இருக்கும் நிலையில், இந்த சம்பவத்தை வைத்து அஜித் ரசிகர்களால் இந்திய சினிமாவுக்கே அவமானம் என்று விஜய் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர், அதற்கு அஜித் ரசிகர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

Related articles

Recent articles

spot_img