
சௌதி ஆராம்கோவின் பெட்ரோல் ரிஃபைனரிகள் நிறைய கிழக்கு பிராந்தியத்தில் இருக்கிறது.. அதில் ஒன்று அல்பேய்க்கில் இருக்கிறது.. இது தம்மாமில் இருக்கிறது. அதே போல் குரேய்ஸ் என்னுமிடத்தில் இன்னொன்று இருக்கிறது..
ட்ரோன் தாக்குதலால் இரண்டு சுத்திகரிப்பு ஆலையின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. இது இன்று காலை சவுதி நேரம் 9.05 ( இந்திய நேரம் 11.35) தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது. எரிவதை தடுக்க போராடுகிறார்கள்.
இதுவும் கோழைத்தனமான தாக்குதல். இப்படியான தாக்குதல்கள் இந்தியாவில் மிக மிக இலகுவாக நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருக்கிறது. அதுவும் சரக்கு, பீட்ஸா போன்றவைகளை ட்ரோன் மூலமாக டெலிவரி பண்ணலாம் என்கிறதெல்லாம் நடக்கிறது..
மிக மிக துல்லியமாக மிலிட்டரி இன்ஸ்ட்டலேஷன்களிலோ.. பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களான.. ரயில், பஸ், நிலையங்களிலோ.. அல்லது இப்படியான எந்த சிவில் இடங்களிலோ.. பாகிஸ்தான் தீவிரவாதிகள் இப்படியான பட்டாசு வைத்து விட வாய்ப்பு இருக்கிறது. இதை ரிமோட்டில்.. ஜிபிஎஸ் தயவால் சரி பார்த்து துல்லியமாய் அடிக்கும் வாய்ப்பு இருப்பதால்.. முக்கியமான தலைவர்களுக்கும் அதிகமான எலக்ட்ரானிக் பாதுகாப்பு தேவைப்படுகிறது.
இந்த ட்ரோன்களில் நானோ வகை கூட தயாரிக்கிறார்கள். ஈ, கொசு அளவில் இருந்தால் இன்னும் கஷ்டம்.. இப்படி தயாரிக்கும் ட்ரோன்கள் ரிஜிஸ்தர் செய்யப்படுகிறதா.? இல்லையென்றால் சிக்கல்தான்.
- பிரகாஷ் ராமசாமி