பேனர்களை கண்காணிக்க ரோந்து வாகனம்! புகார் தெரிவிக்க எண்கள்! சென்னை மாநகராட்சி!

Published:

admk banner - 2026

சென்னை மாநகராட்சி பகுதிகளில் வைக்கப்படும் பேனர்களை கண்காணிக்க ரோந்து வாகனங்கள் இயக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. மேலும் புகார் அளிக்க தொலைபேசி எண்களையும் மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னை பள்ளிக்கரணையில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்து விழுந்ததில் இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்தார்.

இதன் காரணமாக சென்னை மாநகராட்சி பகுதிகளில் வைக்கப்படும் பேனர்களை கண்காணிக்க ரோந்து வாகனங்கள் இயக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

மேலும் பேனர் தொடர்பான புகார்களை 9445190205, 9445190698,9445194802 ஆகிய எண்களில் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் விதிமீறி பேனர்கள் வைக்கப்பட்டால், பேனர்களை அச்சடித்த அச்சகம் சீல் வைக்கப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

Related articles

Recent articles

spot_img