சிங்கப்பூர்: சிங்கப்பூரில் முதல் பிரதமர் லீயின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சிங்கப்பூர் சென்ற மோடி, அவருக்கு புகழாரம் சூட்டினார். கனத்த மன நிலையில் சிங்கப்பூருக்கு வந்திருக்கிறேன் என்று சிங்கப்பூர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்ட மோடி, நம் காலச் சூழலில் மிக உயரிய தலைவராக லீ திகழ்ந்தார் என்று புகழாரம் சூட்டினார். சிங்கப்பூரின் ஒரு தலைமுறையில் அதன் முன்னேற்றத்தை வடிவமைத்தவர், சிங்கப்பூர் அடைந்துள்ள வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் அதன் தன்னம்பிக்கையிலும் திருப்தியுடன் விட்டுச் சென்றுள்ளார் லீ என்று குறிப்பிட்டார். நாம் இப்போது செய்திருப்பதைக் காட்டிலும் இந்தியாவினால் மிக அதிகமாக சாதிக்க முடியும் என்று நம்பினார் அவர். சிங்கப்பூரின் நிறுவுனரும் முதல் பிரதமரும் தந்தையுமான அவரின் இழப்புக்கு சிங்கப்பூர் மக்களுக்கு இந்திய மக்களின் ஆழ்ந்த வருத்தத்தை நான் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் மோடி. இதனிடையே, லீயின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்த வந்த அமெரிக்க முன்னாள் அதிபர் பில் க்ளிண்டனுடன் மோடி பேசினார். அப்போது ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்போட் உடன் இருந்தார். மேலும், கனடாவின் கவர்னர் ஜெனரல் டேவிட் ஜான்சன், இஸ்ரேலின் அதிபர் ர்யுவென் ரிவ்லின் உள்ளிட்டோருடன் மோடி பேசினார். பின்னர் லீயின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக இரங்கல் குறிப்பில் தன் கைப்பட வாசகங்களை எழுதிவைத்தார்.
Singapore: Prime Minister @narendramodi writes in the condolence book. pic.twitter.com/cGkj3XzFi8 — PMO India (@PMOIndia) March 29, 2015
PM @narendramodi & the Governor General of Canada, His Excellency the Right Honourable David Johnston in Singapore. pic.twitter.com/RvgMa1KV4T — PMO India (@PMOIndia) March 29, 2015
PM of Australia Mr. @TonyAbbottMHR, PM @narendramodi and former President of USA Mr. @billclinton in Singapore. pic.twitter.com/iVuceSjMnK — PMO India (@PMOIndia) March 29, 2015
@PresidentRuvi and @narendramodi meet in Singapore pic.twitter.com/Hv5DCFVgFI — Israel in India (@IsraelinIndia) March 29, 2015