December 6, 2025, 10:32 AM
26.8 C
Chennai

கி.வீரமணியின் மலேசிய நிகழ்ச்சி ரத்து! சாதித்த ஹிந்து மன்றம்!

veeramani - 2025

மலேசியாவில் வரும் நவம்பர் 24 (ஞாயிற்றுக்கிழமை) திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி, மலேசிய இந்து அரசு சாரா அமைப்புகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து நிறுத்தப்பட்டுள்ளது.

திக., நிறுவனர் ஈ.வே.ராமசாமி (ஈ.வி.ஆர்) யின் தமிழ் திரைப்படத்தை திரையிடுவது தொடர்பாக வீரமணி மலேசியா செல்லவிருந்தார். திரைப்படத்தின் திரையிடல் தொடர்பாக ஓர் அழைப்பிதழ், “பெரியார் ராமசாமியின் வருகை மற்றும் அதன் தாக்கம்” குறித்து, “பெரியார்” திரைப்பட திரையிடலுக்கு முன்பு கி.வீரமணி பேசுவார் என்று கூறப் பட்டிருந்தது.

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள இந்திய தூதரகத்தின் பகுதியாக இருக்கும் இந்தியா-மலேசியா பாரம்பரியக் குழு மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய கலாச்சார மையம் ஆகியவற்றின் உதவியில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால், இந்து மதம் குறித்தும் இந்துக்கள் குறித்தும் இந்திய நாடு குறித்தும் கேவலமாகவும் வன்முறையைத் தூண்டும் வகையிலும் பேசி வரும் வீரமணி போன்ற விஷமப் பிரசாரகர்கள் பேசுவதற்கு மலேசியா இந்துதர்ம மாமன்றம் (மலேசியா இந்து தர்ம மன்றம்) மற்றும் சில அமைப்புகள் வீரமணியை மலேசியாவுக்கு வர தடை விதிக்குமாறு மலேசிய உள்துறை அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தன.

திராவிடர் கழக தலைவரின் வருகையை கண்டித்தும், பல இன மற்றும் பல கலாச்சாரம் கொண்ட நாட்டின் மத மரபுகள் மற்றும் நடைமுறைகள், வீரமணி வருகையால் பாதிக்கப் படவில்லை என்பதை மலேசிய அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்று கூறியிருந்தது இந்து தர்ம மன்றம்.

குறிப்பாக, மன்றம் அவரது நேர்காணலின் வீடியோ கிளிப்பை சுட்டிக்காட்டியது, அதில் அவர் கடவுளை வணங்குபவர்களை – எல்லா மதங்களையும் சேர்ந்தவர்களை- “முட்டாள்கள்” என்றழைத்தார். இவ்வாறு கடவுள் நம்பிக்கையாளரை முட்டாள்கள் என்று விளிப்பதை ஓர் இறை கொள்கை மற்றும் கடவுள் நம்பிக்கை கொண்ட இஸ்லாமிய நாடான மலேசியா ஏற்றுக்கொள்கிறதா என்றும் இந்து மன்றம் கேட்டிருந்தது

மலேசிய இந்து தர்ம மாமன்றம், கடவுளை நம்புங்கள் மற்றும் ஒட்டுமொத்த சமுதாயத்தினரிடையே ஒரு முழுமையான ஒற்றுமையை அடைவதில் நம்பிக்கை அவசியம் என்பதை வலியுறுத்தியது.

மலேசியாவில், இந்திய தூதரகத்தின் சார்பில் , கலாச்சார மையம் இந்து கடவுள்களையும் இந்துக்களையும் கேலி செய்வதற்கும் மனரீதியாக துன்புறுத்துவதற்குமான வாய்ப்பை, முற்றிலும் மறுக்காமல், கி வீரமணி என்ற நபரின் பின்னணியை அறிந்தும் இத்தகைய ஒரு நபர் இந்த நிகழ்வுக்கு அழைக்கப் பட்டதில் சமூக ஊடகங்கள் ஆத்திரமடைந்தன. மலேசிய தூதரக அதிகாரிகள் பின்னணி குறித்த தங்கள் சந்தேகத்தை பலமாக எழுப்பினர்

ஒசாமா பின்லேடனைக் கொண்டாடும் அமெரிக்க தூதரகங்கள் போலவே இந்திய ஹை கமிஷனின் செயல்பாடும் கேலிக்குரியது என்று ஓர் அறக்கட்டளையின் நிறுவுனர் ராஜீவ் மல்ஹோத்ரா ட்வீட் செய்துள்ளார்.

கி.வீரமணியின் திட்டமிடப்பட்ட வருகை மலேசிய தமிழர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது, அவர் “உடைக்கும் இந்தியா படைகளின்” ஒரு பகுதியாக கருதப்படுவதால் அவரது வருகைக்கு எதிரானவர்கள் அணிதிரண்டனர்.

இந்த நிகழ்வில் இந்திய தூதரகம் ஏன் முதன்முதலில் ஈடுபட்டது என்று மலேசிய தமிழர்கள் ஆச்சரியப்படுகிறார்கள்!

மலேசியாவில் திராவிட சித்தாந்தங்களை தாங்கள் நிராகரித்ததாகக் கூறினர். வீரமணி தனது 2012 பயணத்தின் போது அந்த நாட்டில் ஏற்படுத்திய குழப்பத்திலிருந்து மலேசிய தமிழர்களுக்கு சங்கடம் தோன்றியது. ஈப்போவில் நடந்த ஒரு கூட்டத்தில், அவர் ஸ்ரீ கிருஷ்ணரை இழிவுபடுத்தியிருந்தார், அதன்பிறகு இந்து சங்கம் தனது கருத்துக்களைத் தெரிவித்து கண்டித்தது.

பெரும்பாலும் 2012 ல் கி.வீரமணியால் மலேசியாவில் என்ன நடந்தது என்பது குறித்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் எழுப்பிய கூச்சலும் கூக்குரலுமே, இப்போது கி.வீரமணி கலந்து கொள்ளவிருந்த நிகழ்வை ரத்து செய்ய காரணமாக அமைந்திருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories