சரணாலயத்தில் இருந்து வெளியே வந்து பெண்ணைக் கொன்ற காண்டாமிருகம்

rhinoகாட்மாண்டு: நேபாளத்தில் மாத்வான்புர் மாவட்டத்தில் உள்ள வனவிலங்குகள் சரணாலயம் சுற்றுச் சுவர் இல்லாத திறந்த வெளி சரணாலயம். இங்கு காண்டாமிருகங்களில் ஒன்று சரணாலயத்தில் இருந்து தப்பி வெளியே வந்தது. பின்னர் அது அங்கிருந்து மெதுவாக நடந்து, சுமார் 20 கி.மீ தொலைவு வந்து கிடாயுடா நகரை அடைந்தது. அதைப் பார்த்த பொதுமக்கள் அச்சத்தால் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனிடையே காண்டாமிருகத்தைத் துரத்த டிரம்ஸ்கள் இசைத்தனர். ஹாரன் ஒலித்தனர். ஆனால் இவற்றால் எல்லாம் அங்கிருந்து செல்வதற்கு பதிலாக, அச்சமும் ஆத்திரமும் அடைந்த காண்டாமிருகம் சாலையில் தறிகெட்டு ஓடியது. எதிரே வந்தவர்களை கடுமையாகத் தாக்கியது. அவ்வாறு தாக்கப்பட்ட பெண் ஒருவர் அப்போது பலியானார். காண்டாமிருகத்தின் தாக்குதலில் 6 பேர் காயம் அடைந்தனர். பின்னர், அதனை பிடிக்கும் முயற்சியில் அதிகாரிகள் இறங்கினர். காடுகள் அதிகம் அழிக்கப் படுவதால், இவை அங்கிருந்து தப்பி வருகின்றன. இதனால் கிராமத்தினர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். நேபாளத்தில் 534 காண்டமிருகங்கள் உள்ளன. அவை கொம்புகளுக்காக சீனாவில் அதிகம் வேட்டையாடப் படுகின்றன. அவற்றின் மருத்துவ குணங்களுக்காக சீனா, தெற்கு ஆசியாவில் அவை அதிகம் வேட்டையாடப் படுகின்றன.