வெள்ளிக்கிழமை தொழுகையை தடுக்கச் சென்ற போலீஸுக்கு கல்வீச்சு: இது பாகிஸ்தானில்!

உலகம் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
pakistan stone pelt - 2026

கொரோனா வைரஸ் தாக்குதல் உலகெங்கும் பெரும் பிரச்னையாகி, முடக்கிப் போட்டுள்ளது. வெள்ளிக்கிழமை அன்று தொழுகைக்குக் கூடுவதை அரசுகள் தடைவிதித்து, தனிமைப் படுத்தலை வற்புறுத்தி வருகின்றன. மேலும், மதக் கடமை என்ற பெயரில் பொதுமக்கள் கூடுவதையும் கண்டிப்புடன் தடுத்து வருகின்றன. ஆயினும் தடையை மீறி இவ்வாறு கூடுபவர்களைத் தடுக்கச் செல்லும் போலீஸாருக்கு அடியும் உதையும் கல்லெறியும் கொடுத்து துரத்துகின்றனர் சிலர்.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று, வழக்கமான தொழுகை செய்வதற்காக பாகிஸ்தானில், கராச்சி மாகாணத்தில் உள்ள கௌஸியா மசூதிக்குயில் உள்ளூர் மக்கள் அதிகம் கூடத் தொடங்கி யிருந்தனர். ஆனால், உள்ளூரில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப் பட்டிருந்த நிலையில், கூட்டத்தைச் சேர விடாமல் கலைக்கச் சென்றனர் போலீஸார். ஆனால் போலீஸாரை அவர்கள் ஓட ஓட விரட்டி, கற்களைக் கொண்டு எறிந்தனர்.

இதை அடுத்து போலீசார் வாகனத்தில் ஏறித் தப்பிச் சென்றனர். தொடர்ந்து, இந்தச் சம்பவம் தொடர்பாக 4 பேர் மீது அரசு தடை உத்தரவை மீறியதாக ஒரு வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். ஆனால் அந்த மசூதியின் தலைமை மீது எந்த நடவடிக்கையுமெடுக்கவில்லை. அதற்குக் காரணம் மத ரீதியான அழுத்தம் என்று போலீசார் கூறியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.