
தமிழகத்தில் வெகு நாட்களாக பாஜக.,வினர் மட்டுமல்லாது, ஊடகங்களும் தங்கள் ஊகங்களால் இவர் தலைவர், அவர் தலைவர் என்று தாங்களே தலைவரை அறிவித்துக் கொண்டிருந்த நிலையில்… எவர் ஊகத்திலும் இல்லாத ஒருவரை தலைவர் என்று அறிவித்தது பாஜக., தலைமை!
அது போல், நேற்று, தெலங்காணா மாநில பிஜேபிக்கு புதிய தலைவரை அறிவித்தது தலைமையகம். தெலங்காணா பிஜேபி தலைவராக கரீம்நகர் எம்பி பண்டி சஞ்சய்குமார் என்பவரை நியமித்து உள்ளது.

இளைஞர்களிடம் நல்ல பிடிப்பு உள்ள பண்டி சஞ்சய்க்கு பிஜேபி தலைமையகத்தோடு கூட ஆர்எஸ்எஸ் உடனும் நல்ல தொடர்பு உள்ளது. 2018 நவம்பரில் நடந்த தெலங்காணா அசம்பிளி தேர்தலில் தோல்வியுற்றார். இவர் 2019 ல் நடந்த பார்லிமென்ட் தேர்தலில் வெற்றி பெற்றார்.
‘முன்னூரு காப்பு’ இனத்தைச் சேர்ந்த பண்டி சஞ்சய் அவருடைய தொகுதியில் மட்டுமின்றி தெலங்காணா முழுவதும் சிறப்பாக அறியப்படுபவர்!