உலகளவில் கொரோனாவால் உயிரிழப்பு 3 லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை இந்தியாவில் 2,549லிருந்து 2,649ஆக உயர்ந்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,00,220 ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் கொரோனாவால் 44.78 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 16.82 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.
அதே நேரம் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 78,003லிருந்து 81,970ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 26,235லிருந்து 27,920ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,549லிருந்து 2,649ஆக அதிகரித்திருப்பதாக, மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் மே 15 வெள்ளிக்கிழமை இன்று காலை 9 மணி நிலவரப்படி, கொரோனா பாதிப்பு 82 ஆயிரத்தை நெருங்குகிறது. 81,970 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,649 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 78,003 லிருந்து 81,970 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 2,549 லிருந்து 2,649 ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 26,235ல் இருந்து 27,920 ஆகவும் அதிகரித்தது. 51,401 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 3,967 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. 100 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாநில வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பு:
மஹாராஷ்டிரா – 27,524 – 1,019
தமிழகம் – 9,674 – 66
குஜராத் – 9,591 – 586
தில்லி – 8,470 – 115
ராஜஸ்தான் – 4,534 – 125
மத்தியப் பிரதேசம் – 4,426 – 237
உத்தரப் பிரதேசம் – 3,902 – 88
மேற்கு வங்கம் -2,377 – 215
ஆந்திரா – 2,205 – 48
பஞ்சாப் – 1,935 – 32
தெலங்கானா – 1,414 – 34
பீஹார் – 994 – 07
கர்நாடகா – 987 – 35
காஷ்மீர் – 983 – 11
ஹரியானா – 818 – 11
ஒடிசா – 611- 03
கேரளா -560 04
ஜார்க்கண்ட் – 197 – 03
சண்டிகர் – 191 – 03
திரிபுரா- 156 – 0
அசாம் – 87 – 02
உத்தராகண்ட் – 78 – 1
ஹிமாச்சலப் பிரதேசம் – 74 – 02
சத்தீஸ்கர் – 60 – 0
லடாக் – 43 – 0
அந்தமான் – 33 – 0
கோவா- 14 – 0
மேகாலயா- 13- 01
புதுச்சேரி- 13 – 0
மணிப்பூர் – 03 – 0
தாத்ரா நாகர் ஹவேலி-1-0
அருணாச்சலப் பிரதேசம் – 01 – 0
மிசோரம் – 01 – 0