ஊரடங்கு: வழியில் கிடந்த பணம்! 7 கோடி 58 லட்சம் காவல் நிலையத்தில் சேர்த்த தம்பதியர்!

உலகம் பொது தகவல்கள்
money 2
money 2

ஊரடங்கு நேரத்தில் முடங்கி இருந்ததால் வெளியே சென்ற போது சாலையில் கேட்பாரற்று கிடந்த ஏழரை கோடி ரூபாய் பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தம்பதியின் நேர்மையை பல்வேறு தரப்பினர் வெகுவாக பாராட்டு வருகின்றனர்.

அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணம் கரோலின் நகரை சேர்ந்த டேவிட்-எமிலி சாண்டஸ் தம்பதி காரில் நெடுந்தூர பயணம் மேற்கொண்டனர். செல்லும் வழியில் சாலையின் நடுவே 2 பைகள் கேட்பாராற்று கிடந்ததை பார்தத அவர்கள், குப்பை பைகள் என நினைத்து இரண்டையும் எடுத்து தங்கள் காரில் போட்டுக்கொண்டனர். வீட்டிற்கு திரும்பிதும் பைகளை அப்புறப்படுத்தும் போது, உள்ளே கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர்கள் இருப்பதை பார்த்தனர்.

அவற்றை எண்ணிப் பார்த்தபோது 1 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.7 கோடியே 56 லட்சத்து 95 ஆயிரம்) இருந்தது. அதனைத் தொடர்ந்து காவல்துறையை வரவழைத்து அவர்களிடம் 1 மில்லியன் டாலரை அப்படியே ஒப்படைத்தனர். பணம் யாருக்கு சொந்தமானது என்று காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். டேவிட்- எமிலி சாண்டஸ் தம்பதிக்கு பலதரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.