இந்தியா குறித்து டிரம்ப் போட்ட டிவிட்… நெட்டிசன்கள் பாராட்டு!

Published:

modi trump
modi trump

‘நன்றி நண்­பரே… இந்­தி­யாவை அமெ­ரிக்கா நேசிக்­கிறது’ என, பிர­தமர் மோடிக்கு நன்றி தெரிவித்து, அமெ­ரிக்க அதி­பர் டொனால்டு டிரம்ப் பதிவு செய்த டிவீட், சமூக வலை­த­ளங்­களில் அனை­வ­ரைது வர­வேற்பை­யும் பெற்­றுள்­ளது. 

அமெ­ரிக்­கா­வின், 13 மாகா­ணங்­கள், 1776 ஜூலை, 4ல், பிரிட்­டன் ஆட்­சி­யி­லி­ருந்து சுதந்­தி­ரம் அடைந்­தன. இந்த நாள், ஆண்டு தோறும் அமெ­ரிக்­கா­வின் சுதந்­திர தின­மாக கொண்­டாடப்­ப­டு­கிறது.

அமெ­ரிக்­கா­வின், 244வது சுதந்­திர தினம், நேற்று முன்­தி­னம் கோலா­க­லமாக கொண்­டாடப்­பட்­டது. அமெ­ரிக்க அதி­பர் டிரம்­பிற்கு, பிர­த­மர் மோடி அனுப்­பிய வாழ்த்­துச் செய்­தி­யில், ‘சுதந்­திர தினத்தை கொண்­டா­டும் அதி­பர் டிரம்­பிற்­கும், அமெ­ரிக்க மக்­க­ளுக்­கும் வாழ்த்­து­கள். ‘உல­கின் மிகப் பெரிய ஜன­நா­யக நாடு­க­ளான அமெ­ரிக்­கா­வும், இந்­தியா­வும், சுதந்­தி­ரத்­தையும், மனி­தத்­தை­யும் போற்­று­வ­தில் சிறந்து விளங்­கு­கின்­றன’ என, தெரி­வித்­தி­ருந்­தார். 

இதற்கு நன்றி தெரி­வித்து, அதி­பர் டிரம்ப், பிர­த­மர் மோடிக்கு அனுப்­பி­யுள்ள செய்­தி­யில், ‘உங்­கள் வாழ்த்­துக்கு நன்றி நண்­பரே… இந்தி­யாவை அமெ­ரிக்கா நேசிக்­கிறது’ என, தெரி­வித்­துள்­ளார். 

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!
https://twitter.com/realDonaldTrump/status/1279469749567655936

இரு நாட்டு தலை­வர்­க­ளுக்கு இடையே­யான இந்த நெகிழ்ச்­சி­யான வாழ்த்து பரி­மாற்­றத்­துக்கு, பிர­ப­லங்­கள் பல­ரும் சமூக வலை­த­ளங்­களில் பாராட்டு தெரி­வித்­துள்­ள­னர். 

Related articles

Recent articles

spot_img