வந்தேறிகளின் வம்பு பிரச்சாரங்கள்! விளைவுகள்… உண்மைகள்…. (பகுதி-11)

Published:

christian conversion
christian conversion

Xtians only will be taken to heaven, rest are all sinners and will go to hell.

கிறித்துவ மத விசுவாசிகள் மட்டுமே சொர்கத்திற்கு செல்வார்கள். விசுவாசமில்லாதவர்கள் பாவிகள். நரகத்தை அடைவர்.

1600 டிசம்பர் 31ல் வியாபார நிமித்தமாக ஈஸ்ட் இந்தியா கம்பெனி பவித்ர பாரத நாட்டிற்குள் தம் பவித்ரமற்ற பாதங்களை எடுத்து வைத்தனர். அப்போதிலிருந்து மதமாற்றம் என்னும் மாய வலையில் சனாதன தார்மீகர்கள் விழுந்தார்கள்.

அதன்பிறகு வந்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கிறித்துவத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தினர். ஏழை எளியவர்கள் மீதும் அப்பாவி மக்கள் மீதும் தூண்டில் வீசினார்கள். கால் வைத்த ஒவ்வொரு இடத்திலும் உள்ளூர் வாசிகளை எப்படியாவது வழிக்கு வரவைத்தனர். சாம, பேத, தான, தண்டம் என்னும் உபாயங்களால் மதமாற்றம் செய்தனர். அதில் ஒரு பகுதியே இந்த பிரச்சார வாக்கியம். கிறிஸ்தவர்கள் மட்டுமே சுவர்க்கத்துக்கு அருகதை உடையவர்கள் என்ற பொய்ப் பிரச்சாரம்.

கிறித்துவ மதம் பிறந்து 2000 வருடங்கள் ஆகியுள்ளது. அதற்கு முன்பு எத்தனை பேர் இந்த பூமி மீது நடமாடவில்லை? எத்தனை பேர் புராண புருஷர்கள் பாரத தேசத்தை ஆளவில்லை? எத்தனை பேர் உடலோடு சொர்க்கத்திற்கு செல்லவில்லை?

இவற்றை எல்லாம் புறந்தள்ளிவிட்டு தம் புதிய மதம் மட்டுமே சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் என்ற தீய பிரசாரத்தின் பின்னால் பெரிய சதி மறைந்துள்ளது. அகண்ட பாரதத்தை ஆளுவதற்கு தம் அடிவருடிகளை உருவாக்குவதற்காக ஏற்படுத்திய சதி இது.

அப்பாவிகளையும் படிப்பறிவில்லாதவர்களையும் மருத்துவமனையில் சேர்ந்த நோயாளிகளையும் குஷ்ட வியாதிக்காரர்களையும் அடிமைப்படுத்தி மதம் மாற்றும் செயல் 400 ஆண்டுகளாக நடந்து வருகிறது. பிரிட்டிஷ் தம் தாசர்களை உருவாக்கிக் கொண்டது. வேலை தருவதாகவும் பணம் அளிப்பதாகவும் ஆசை காட்டி கிறிஸ்துவர்களாக மதம் மாற்றியது.

stalin christian sabha
stalin christian sabha

அதன் தீய விளைவுகள்?

எளிதாக சொர்க்கத்திற்குச் சேரும் உபாயம் என்றெண்ணி அப்பாவி மக்கள் கிறித்துவ மதத்தை தழுவினார்கள். கிறித்துவ மதத்தை ஏற்றவர்கள் பிரிட்டிஷ் ஆட்சியாளர் களுக்கு அனுகூலமானவர்களாக மாறினார்கள். மதம் மாறியவர்கள் உயர்ந்த பாரதிய பண்பாட்டிலிருந்து விலகினார்கள். பிற மதங்களை வெறுக்கும்படியும் அவர்களைக் கொல்லும்படியும் கூறும் பைபிள் மத நூல், வாசிக்கும் விசுவாசிகளிடம் சகிப்பின்மையை வளர்ந்தது.

இந்த அரக்க மதத்தின் உண்மைத்தன்மை என்ன?

தாம்ஸ் பெயின் என்ற எழுத்தாளர் பைபிள் குறித்து இவ்வாறு கூறுகிறார்: “பைபிள் கடவுளின் கூற்று என்று கூறுவதைவிட பிசாசின் கூற்று என்று கூறுவது சரியாக இருக்கும். பைபிளை கையில் பிடித்துக் கொண்டு அலைபவர்கள் பைபிளை நிச்சயம் படித்திருக்க மாட்டார்கள். படுத்திருந்தால் கிறிஸ்தவ மதத்தில் இருக்கமாட்டார்கள்”.

சார்லஸ் டிக்கன்ஸ் என்ற பிரபல எழுத்தாளர் மிஷனரிகள் செய்துவரும் போக்கிரித்தனமான செயல்களை விமர்சித்து இவர்கள் கால் வைத்த இடங்களில் அழிவு நிச்சயம் என்கிறார்.

ALSO READ:  அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

மேலோட்டமாக வாசிப்பவர்களுக்கு கிறிஸ்தவர்களால் எந்த ஆபத்தும் இல்லை என்று தோன்றலாம். அது மட்டுமல்ல. மனித இனத்தின் மீது அன்பு காட்டும் பிரேமை வடிவங்களாக தென்படலாம். சேவை தர்மத்தின் மறுவடிவமாக காணப்படலாம். அவர்களின் சொற்பொழிவுகளில் சேவை, அன்பு, மோட்சம் போன்ற சொற்கள் ஏராளமாக வந்து விழுந்தபடி இருக்கும்.

பல இடங்களில் பள்ளிகள் கல்லூரிகள் மருத்துவமனைகள் அநாதை இல்லங்கள் நடத்துகிறார்கள். வெளிநாட்டிலிருந்து வரும் பணத்தோடு கூட நம் நாட்டு மக்களிடம் இருந்தும், அவர்கள் வெறுக்கும் இந்து மதத்திலும் இருந்தும்கூட சந்தா வசூல் செய்வார்கள். பாயின் கீழே ஓடும் நீர் போல வேலையை காட்டுவார்கள். இதன் பின்னால் உள்ள சதி ஒன்றே ஒன்றுதான். இந்தியாவில் இந்துக்கள் அனைவரையும் கிறித்துவர்களாக மாற்றுவதே!

இந்த விஷயத்தை பல பிரமுக கிறித்துவ பிரச்சாரகர்கள் தெளிவாக பலமுறை அறிவித்துள்ளார்கள். நியோகி கமிஷன் மதமாற்ற சதி குறித்து சிறப்பான பரிசோதனை செய்தது. வாய்ஸ் ஆப் இந்தியா இந்த கமிஷனின் அறிக்கையை வெளியிட்டது. கிறிஸ்தவ பிரச்சாரகர்களின் கொடைத்தன்மை எல்லாம் மதம் மாற்றுவதற்கு உதவும் முகமூடி மட்டுமே என்கிறார் நியோகி.

சுதந்திர இந்தியாவில் மதமாற்றங்கள் மேலும் பெருகின. வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்தும் மிசோரமும் இதற்கு உதாரணங்கள். சர்ச் ஆதிக்கத்தால் ஆந்திரப் பிரதேசத்தில் வரப்போகும் நாட்கள் கடினமாகவே இருக்கப்போகின்றன.

தனிமனித ஒழுக்கம் இன்றி, செய்த தவறுகளை சர்ச்சுகளில் ஒப்புக்கொண்டு கை கழுவிக் கொள்ளும் சித்தாந்தத்தால் மோட்சம் கிடைத்துவிடும் என்ற பொய் பிரச்சாரத்தால் சமுதாயத்தில் பாவம் செய்வதில் அச்சம் நசிந்து போய்விட்டது. அமைதியின்மை பெருகுகிறது. கிறித்துவ நாடுகளில் இம்சை, கொடூரங்களின் அளவு பெருகி வருவதற்கு இந்த கொள்கையே காரணம்.

“ஒருமுறை நான் ஒரு கிறிஸ்தவ பிரச்சாரகரை சந்தித்தேன். அவர் எனக்கு ஒரு புத்தகம் தந்தார். அதனைப் படித்தேன். அதில் இவ்வாறு உள்ளது: கடவுளை அடைவதற்கு ஒரு நாளைக்கு இரு முறை பிரார்த்தனை செய்து ஞாயிறன்று சர்ச்சுக்கு சென்று வந்தால் போதும். மீதி நேரங்களில் எப்படிப்பட்ட லௌகிக சுக அனுபவங்களில் மூழ்கினாலும் பரவாயில்லை. இன்றைய கிறிஸ்துவ பிரச்சாரகர்கள் தம் தீய திட்டங்களை தொடர்வதற்கு இந்த வாக்கியம் பயன்படுகிறது” – Bunch of thoughts by Sri Guruji.

ஒரு பக்தனுக்கும் ஒரு பாதிரியாருக்கும் இடையே நடந்த உரையாடல் அண்மையில் வாட்ஸப்பில் சுற்றி வந்தது. ஞாயிறு கூட சர்ச்சுக்கு செல்ல இயலவில்லை என்று கூறிய ஒரு பக்தனை அந்த பாஸ்டர் பரலோகத்திற்கு அனுப்புவதற்கு மாற்று வழிகளை விற்பதில் பேரம் பேசும் ஆடியோ அது.

பைபிள் மீது முழுமையான படிப்பறிதல் உள்ள அமெரிக்காவைச் சேர்ந்த ப்ரொஃபஸர் வெலகபூடி பிரகாஷ்ராவு இவ்வாறு தெரிவிக்கிறார்: “பைபிளில் என்ன உள்ளது என்று அவர்களுக்கே தெரியாது. ஹிந்துக்களுக்கு அதுபற்றி சுத்தமாக எதுவும் தெரியாது. மேதாவிகள் பைபிளைப் படித்தால் அது அவர்களுக்கு ருசிக்காது என்று நிச்சயமாகக் கூறுவேன்.

ALSO READ:  சோசலிசம் என்னும் கை விலங்கு!

மேற்கு நாடுகளிலும் இதே நிலைமைதான். அநாகரிகமான கதைகள், நம்ப இயலாத கட்டுக்கதைகள், குரூரமான அறிவிப்புகள், தண்டனைகள் உள்ள பைபிளில் சுமார் 1100 செய்யுட்கள் பண்பாடுள்ள மனிதர்களுக்கு அருவருப்பை ஏற்படுத்தும். தனிமனித சுதந்திரத்திற்கும் நேர்மையான வாழ்க்கை முறைக்கும் உலக மனித சகோதரத்துவம் என்ற உயர்ந்த சிந்தனைக்கும் அறிவியல் பூர்வமான ஞானத்திற்கும் பைபிளில் இடம் இல்லை”. என்று கூறி ஐன்ஸ்டீன் கோட்பாட்டை உதாரணம் கட்டியுள்ளார்.

பூமி உருண்டை என்று கூறியவர்களையும் மறுபிறவி உள்ளது என்ற உண்மையை எடுத்துரைத்தவர்களையும் கிறிஸ்துவ மதம் மிகக் கொடுமையாக தண்டித்தது. நிர்வாணமாக ஊர்வலம் விட்டது. மரணதண்டனை விதித்தது. கண்மூடித்தனமாக கொலைகளைச் செய்தது கிறிஸ்தவம். அதனால்தான் அமெரிக்கா போன்ற நாடுகளில் 2017 ன் கணக்கின்படி 14% கிறிஸ்தவர்கள் சர்ச்சுக்கு செல்வதை நிறுத்தி விட்டார்கள். நான்காயிரம் சர்ச் கட்டிடங்கள் மூடப்பட்டன. அவற்றை இஸ்கான் போன்ற அமைப்புகள் வாங்கி வருகின்றன.

பைபிளில் என்ன உள்ளது?

கடவுள் ஒரு வார காலத்தில் உலகைப் படைத்து ஏழாவது நாள் ஓய்வெடுத்துக் கொண்டார் என்று கூறும் பைபிளில் ஏழாவது நாள் (அப்போது சனிக்கிழமை) வேலை செய்தவர்களை கொல்லச் சொல்லி கட்டளை இட்டார். (எக்ஸோடன் 35/2)

பெண்களுக்கு ஒரு நீதி, ஆண்களுக்கு ஒரு நீதி கூறும் நிபந்தனைகள் பைபிளில் உள்ளன (21/ 7). பெண்கள் முதலாளியாக இருக்க கூடாது. அவள் பேச்சை யாரும் கேட்கக்கூடாது. ஊனமுற்றவர்களை சர்ச்சுக்குள் வர விடக்கூடாது. அவர்களுக்குப் பிரசாதம் (ப்ரெட்) தரக்கூடாது. அடிமைகளை விலைக்கு வாங்கலாம்.

உங்கள் விருப்பப்படி அவர்களிடம் நடந்து கொள்ளலாம். சொன்ன பேச்சைக் கேட்காத பிள்ளைகளை கல்லால் அடித்துக் கொல்லலாம். இதுபோன்ற பைபிள் கூற்றுகள் நமக்கு வியப்பளிக்கின்றன. அனைத்து மதங்களும் ஒன்றே என்று எண்ணுபவர்களை ஆபிரகாமிய மத நூல்களில் உள்ள வாக்கியங்கள் ஆச்சரியத்தில் வாயடைக்கச் செய்யும்.

ஸர்வ தேவ நமஸ்கார: கேசவம் பிரதிகச்சதி
ஏகம் சத் விப்ரா: பஹுதா வதந்தி
ஸர்வே பவந்து ஸுகின:

போன்ற உயர்ந்த ஹிந்துமத சிந்தனைகளுக்கும் பைபிளிலுள்ள அநாகரீகமான வாக்கியங்களுக்கும் தான் எத்தனை வித்தியாசம்!

இணைசட்டம் உபாகமம்: 6/ 14- 15 நீங்கள் பிற கடவுளர்களை அனுசரிக்கக் கூடாது. தம் மக்கள் பிற கடவுளர்களை வணங்குவதை யெஹோவா வெறுக்கிறார்.

இணைச்சட்டம் உபாகமம்: 7/1-16 அவர்களின் நினைவு சின்னங்களை துண்டு துண்டாக உடையுங்கள். அவர்களின் விக்ரகங்களை எரித்து விடுங்கள்.

இணைச்சட்டம் உபாகமம்: 7/ 20 -26 நீங்கள் கல் கடவுளர்களின் விக்ரகங்களை கட்டாயம் உடைத்து எறியுங்கள். அவற்றை நீங்கள் வெறுத்து ஒதுக்குங்கள். அவற்றை உங்கள் வீடுகளுக்கு எடுத்துச் செல்லாதீர்கள்.

இணைச்சட்டம் உபாகமம்: 13/ 6- 10 பிற கடவுளை வழிபடு என்று கூறுபவர் யாராக இருந்தாலும் சரி, உன் சொந்த சகோதரன், மகன், மகள், நீ காதலிக்கும் மனைவி… யாரானாலும் சரி அவர்களின் பேச்சைக் கேட்காதே! அவர்களை சும்மா விடாதே! அவர்களை நீங்கள் கல்லால் அடித்துக் கொல்லுங்கள்!

ALSO READ:  மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

மத்தேயு: 10/ 34 -36 நான் இந்த பிரபஞ்சத்திற்கு அமைதியை எடுத்து வரவில்லை. கத்தியை எடுத்து வந்துள்ளேன். ஏனென்றால் நான் தாய்க்கும் மகளுக்கும் இடையே, மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே விரோதம் ஏற்படுத்துவதற்காக வந்துள்ளேன்.

மத்தேயு: 13/ 38 உலகத்தில் இரண்டே இரண்டு ஜாதிகள். விசுவாசிகள் அவிசுவாசிகள். அவிசுவாசிகளை அக்னிகுண்டத்தில் தூக்கி வீசுவேன்.

கொரிந்தி: 5/11, 18, 20, 6/ 12, 13 பிரபுவின் செய்தியை அங்கீகரிக்க வேண்டுமென்று பிறரையும் கட்டாயப்படுத்துவோம்.

இவ்விதமாக மதமாற்றத்துக்கு லைசென்ஸ், பிற மத வெறுப்பு, பலாத்காரம், சகிப்பின்மையைக் கொட்டும் வாக்கியங்கள், வாசிப்பவர்களுக்கு அருவருப்பை ஏற்படுத்தும் வாக்கியங்கள், பெண்களை அவமதிக்கும் வாக்கியங்கள் அந்த நூல்களில் பலப்பல.

அதன் விளைவே கோடிக்கணக்கானோரை பலி வாங்கியது. க்ரூசேடுகள் (Crusades, ஜிகாத் மாதிரி) சூனியக்காரிகள் என்று சாக்குச் சொல்லி பெண்களை எரித்துக் கொன்றார்கள். (விட்ச் ஹண்டிங்). 15/ 18ம் நூற்றாண்டுகளின் இடைப்பட்ட காலத்தில் ஐந்து லட்சம் பெண்களை சூனியக்காரி என்ற பெயரில் கொன்று குவித்தார்கள்.

ஹிட்லர் பைபிளில் இருந்து ஊக்கம் பெற்று யூதர்களை (Genocide) உயிர் வதை செய்தான்.

கிறித்துவமதம் மனித மனோதத்துவத்தை புரிந்து கொள்ள இயலாமல் போனதால் பல பிரச்சினைகள், பாலியல் வக்கிரங்கள் கிறித்துவ மதத்திற்குள் புகுந்தன. ‘சரீரமாத்யம் கலுதர்ம சாதனம்’ என்று சனாதன தர்மம் முழங்கி வருகையில் உடலை வெறுக்க வேண்டும் என்று கிறிஸ்துவ சித்தாந்தம் கூறுவதால் கிறிஸ்தவ சமூகம் அசுத்தத்திற்கும் நோய்களுக்கும் இருப்பிடம் ஆகியது. கிறிஸ்துவ மதம் பாலியலை ஆரோக்கியமானதாக நினைக்காததால் பல அனர்த்தங்கள் இடம்பெற்றன.

‘இது கிறிஸ்தவம்’ என்ற பெயரில் ‘அரிந்தம’ அவர்கள் எழுதிய (தர்ம ஜாகரண சமிதி வெளியீடு, 435 பக்) நூலில் கிறிஸ்தவ மதம் குறித்து அனைத்து விஷயங்களையும் விவரமாக அளித்துள்ளார். சாகித்ய நிகேதனில் (040- 27563236) இந்த நூல் கிடைக்கிறது.

பிற நாடுகளில் கிறிஸ்தவம் மங்கி வரும் செய்தியைக் கேள்விப்படுகிறோம். ஆனால் கிறிஸ்தவர்கள் மட்டுமே சொர்கத்திற்கு செல்வார்கள் என்று நம்புபவர்கள் நம் நாட்டில் அதிகமாகி வருகிறார்கள்.

தெலுங்கில்: பிஎஸ் சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
(மூலம்: ருஷிபீடம் ஆன்மீக மாத இதழ்)

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img