வேலை முடிந்து வெளியே வந்த நர்ஸ்! கத்தியால் குத்தியும் காரை ஏற்றியும் கொன்ற கொடூரம்!

Published:

image 7 - 2026

தன்னுடயை முன்னாள் கணவனால் நர்ஸ் ஒருவர் மருத்துவமனைக்கு வெளியே கத்தியால் குத்தியும், வாகனத்தால் மோதியும் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தை சேர்ந்த மெரின் ஜாய் (26) அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ப்ரோவார்ட் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார். அவர் பணி முடிந்து மருத்துவமனையில் இருந்து இரவு வெளியே வந்த போது, காரில் வந்த நபர் ஒருவர் மெரினை சரமாரியாக கத்தியால் குத்தினார்.

image 10 - 2026

இதனால் மெரின் ரத்து வெள்ளத்தில் சரிந்தார். உடனடியாக, அந்த நபர் கீழே விழுந்து கிடந்த மெரின் மீது காரையும் ஏற்றி விட்டு தப்பி சென்றார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட மெரின், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்தார்.

image 8 - 2026

இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட போது பிலிப் மேத்யூ என்பவர் மெரினை கொன்றது தெரியவந்தது. பிலிப் மேத்யூ முன்னாள் கணவர். அவரை போலீஸார் கைது செய்தனர். மெரினும் பிலிப்பும் காதலித்து திருமணம் செய்தனர். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக பின்னர், தங்கள் உறவை முறித்து கொண்டனர். மெரின் தன்னை விட்டு பிரிந்து சென்ற ஆத்திரத்தில் பிலிப் இந்த கொலையை செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது. தொடர்ந்து பிலிப்பிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

Related articles

Recent articles

spot_img