படப்பிடிப்பின் போது நீரில் மூழ்கி பாறையின் இடையில் சிக்கிய ஜாக்கி சான்!

Published:

jakki-jhon

வேன்கார்ட்’ படத்தின் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட ஒரு விபத்தில் நீரில் மூழ்கிய ஜாக்கி சானைப் படக்குழுவினர் மீட்டனர்.

ஜாக்கி சான் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வேன்கார்ட்’. இப்படத்தை ஸ்டான்லி டாங் என்பவர் இயக்கி வருகிறார். கொரோனாவால் பாதியில் நிறுத்தப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் தற்போது மீண்டும் சீனாவில் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

படத்தில் ஜாக்கி சான் மற்றும் நடிகை மியா முகி இருவரும் தண்ணீரில் வேகமாகப் பயணம் செய்ய உதவும் ‘ஜெட்-ஸ்கி’ வாகனத்தில் பயணிப்பது போல காட்சி இடம்பெறுகிறது. இதற்கான படப்பிடிப்புப் பணிகள் இன்று நடைபெற்றன. அப்போது எதிர்பாராத விதமாக ஜாக்கி சான் மற்றும் மியா முகி சென்ற ‘ஜெட்-ஸ்கி’ ஒரு சிறிய பாறையில் மோதி விபத்துக்குள்ளானது.

இதனால் ஜாக்கி சான் மற்றும் மியா முகி இருவரும் தண்ணீரில் மூழ்கினர். விழுந்த சில நொடிகளிலேயே மியா முகி நீரிலிருந்து வெளியே வந்தார். ஆனால், ஜாக்கி சான் வெளியே வரவில்லை. இதனால் பதறிப்போன படக்குழுவினர் உடனடியாகத் தண்ணீரில் இறங்கி அவரைத் தேடினர்.

பாறையின் அடியில் சிக்கிக்கொண்ட ஜாக்கி சானால் வெளியே வரமுடியவில்லை. 45 வினாடிகள் தண்ணீருக்குள் தத்தளித்த ஜாக்கி சானைப் படக்குழுவினர் மீட்டனர்.

ALSO READ:  ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகாசியில் காலண்டர் ஆல்பம் வெளியீடு!
jakki

இந்தக் காட்சிகள் சீனத் தொலைகாட்சி, மற்றும் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகியுள்ளன. பொதுவாக தான் நடிக்கும் திரைப்படங்களில் இடம்பெறும் சாகசக் காட்சிகளில் டூப் இல்லாமல் நடிப்பவர் ஜாக்கி சான். இந்த நிலையில் ஜாக்கி சானுக்கு ஏற்பட்ட இந்த விபத்துக்கு அவரது ரசிகர்கள் பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img